தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3062

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஸம்ஸம் நீர் எதற்காக குடிக்கப்படுகிறதோ அது அதற்கே உரியது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

(இப்னுமாஜா: 3062)

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُؤَمَّلِ أَنَّهُ سَمِعَ أَبَا الزُّبَيْرِ، يَقُولُ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

مَاءُ زَمْزَمَ، لِمَا شُرِبَ لَهُ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3062.
Ibn-Majah-Alamiah-3053.
Ibn-Majah-JawamiulKalim-3061.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்

2 . ஹிஷாம் பின் அம்மார்

3 . வலீத் பின் முஸ்லிம்

4 . அப்துல்லாஹ் பின் முஅம்மல்

5 . அபுஸ்ஸுபைர்-முஹம்மத் பின் முஸ்லிம்

6 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25384-அப்துல்லாஹ் பின் முஅம்மல் பின் வஹ்புல்லாஹ் என்பவர் பற்றி சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.

இவரைப் பற்றி பாராட்டியவர்கள்:

  • இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அவர்கள், இவர் குறைந்த ஹதீஸ்களையே அறிவித்துள்ளார்; பலமானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களிடமிருந்து அறிவிக்கும் உஸ்மான் பின் ஸயீத், முஆவியா பின் ஸாலிஹ், அபூபக்ர் பின் அபூகைஸமா ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்பாஸ் அத்தூரீ, அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸஃத் ஆகியோர், இவர் சுமாரானவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர். (இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களின் மாணவர்கள் கருத்துவேறுபாடாக அறிவிக்கும்போது அப்பாஸ் அத்தூரீ அவர்களின் அறிவிப்புக்கே அறிஞர்கள் முன்னுரிமை தருவார்கள்)
  • இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    அவர்கள், இவர் பலமானவர் என்று கூறியுள்ளார்.
  • இவரைப் பற்றி தனது தாரீகில், புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் எதுவும் கூறவில்லை. தனது அல்அதபுல் முஃப்ரதில் இவர் இடம்பெறும் சில செய்திகளை பதிவு செய்துள்ளார். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் முகாரிபுல் ஹதீஸ்-சுமாரானவர் என்று கூறியுள்ளதாக இப்னு ரஜப் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இந்தப் பெயரில் இருவர் உள்ளனர் என்று கருதிக் கொண்டு ஒருவரை பலமானவர் பட்டியலில் கூறியுள்ளார். மற்றொருவரை பலவீனமானவர் பட்டியலில் கூறியுள்ளார்…

இவரைப் பற்றி விமர்சித்தவர்கள்:

  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் இவரைப் பற்றி கூறியுள்ள தகவல் பலவாறு உள்ளது.
    1 . இவர் மக்காவின் நீதிபதியாக இருந்தார். அந்தளவுக்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார்.
    2 . இவரின் செய்திகள் முன்கர் என்றும் கூறியுள்ளார்.
    3 . இவர் நினைவாற்றல் சரியில்லாதவர். இவரின் நம்பகத்தன்மையை குறைக்கும் வேறு குறைகளை நாம் அறியவில்லை என்றும் கூறியுள்ளார்.
  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ ஆகியோர் இவர் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளனர்.
  • இப்ராஹீம் பின் யஃகூப் அல்ஜவ்ஸஜானீ அவர்கள், இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறியதாக சிலர் கூறியுள்ளனர். இதற்கு ஆதாரம் இல்லை.
  • உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    ஆகியோர், இவர் பல செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளனர். இவரைப் போன்று யாரும் அறிவிக்கவில்லை. இவரின் செய்திகள் முன்னுரிமை பெறத்தக்க செய்திகள் அல்ல என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் கூறியுள்ளார்.
  • வேறு சில அறிஞர்கள் மேற்கண்ட அறிஞர்களின் தகவல் அடிப்படையில் முன்கருல் ஹதீஸ் என்றும் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை பலவீனமானவர் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்கள்: தாரீகு இப்னு மயீன்-3/73, அள்ளுஅஃபாஉல் கபீர்-2/302, அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/175, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/221, தஹ்தீபுல் கமால்-16/187, அல்காஷிஃப்-3/202, தஹ்தீபுத் தஹ்தீப்-2/440, தக்ரீபுத் தஹ்தீப்-1/550)


சில அரபி தகவல்:

تاريخ ابن معين – رواية الدوري (3/ 73):
290 – ‌سَمِعت ‌يحيى ‌يَقُول ‌عبد ‌الله ‌بن ‌المؤمل ‌صَالح ‌الحَدِيث


الضعفاء الكبير للعقيلي (2/ 302):
879 -‌‌ عَبْدُ اللَّهِ بْنُ الْمُؤَمَّلِ الْمَخْزُومِيُّ مَكِّيٌّ لَا يُتَابَعُ عَلَى كَثِيرٍ مِنْ حَدِيثِهِ. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: أَحَادِيثُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُؤَمَّلِ مَنَاكِيرُ. حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا عَبَّاسٌ قَالَ: ‌سَمِعْتُ ‌يَحْيَى ‌يَقُولُ: ‌عَبْدُ ‌اللَّهِ ‌بْنُ ‌الْمُؤَمَّلِ ‌صَالِحُ ‌الْحَدِيثِ. حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ مَعِينٍ، يَقُولُ: عَبْدُ اللَّهِ بْنُ الْمُؤَمَّلِ ضَعِيفٌ. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ مَحْمُودٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ سَعِيدٍ قَالَ: سَأَلْتُ يَحْيَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُؤَمَّلِ، فَقَالَ: ضَعِيفٌ


الكامل في ضعفاء الرجال (5/ 221):
حَدَّثَنَا مُحَمد بْنُ عَلِيٍّ، حَدَّثَنا عثمان بن سَعِيد سألت يعني يَحْيى عن عَبد اللَّه بن المؤمل فَقَالَ ضعيف.
حَدَّثَنَا ابن حماد، حَدَّثَنا معاوية، عَن يَحْيى، قال: عَبد الله بن المؤمل ضعيف.
حَدَّثَنَا ابْنُ أَبِي عِصْمَةَ، حَدَّثَنا أَحْمَد بْن أَبِي يَحْيى سَمِعْتُ يَحْيى يقول عَبد الله بن المؤمل مكي ضعيف الحديث.
حَدَّثَنَا علي بن أحمد بن سليمان، حَدَّثَنا أحمد بْنُ سَعْدِ بْنِ أَبِي مَرْيَمَ سَمِعْتُ يَحْيى بْنَ مَعِين يَقُولُ عَبد الله بن المؤمل ليس به بأس ينكر عليه الحديث.
حَدَّثَنَا ابن أبي بكر، وَعَبد الملك، قالا: حَدَّثَنا عَبَّاس سمعت يَحْيى يقول عَبد الله بن المؤمل صالح الحديث.
وقال النسائي عَبد الله بن المؤمل المكي ضعيف.
حَدَّثَنَا ابن حماد، حَدَّثني عَبد اللَّه بن أحمد، عن أبيه قال أحاديث عَبد الله بن المؤمل مناكير.


இந்தச் செய்தியை சிலர் பலவீனமானது என்றும் சிலர் ஹஸன் தரம் என்றும் சிலர் சரியானது என்றும் கூறியுள்ளனர்.

  • இந்த செய்தியைப் பற்றி தனி நூலாக பலரும் எழுதியுள்ளனர். அவற்றில் அறிஞர் திம்யாதீ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோரின் நூல்களும் முக்கியமானவை.
  • இந்தச் செய்தியைப் பற்றியும், இந்த செய்தியின் அறிவிப்பாளர்கள் பற்றிய அறிஞர்களின் தரச் சான்றுகளையும், விமர்சனங்களையும் விரிவாக கூறிய அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் முஹம்மத்
    என்ற ஆய்வாளர், ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    அவர்கள் இந்தச் செய்தியை பற்றி கேட்கப்படும் போது சரியானது என்று கூறியிருப்பதாலும், வேறு சில காரணங்களாலும் இதை சரியான செய்தி என்றே முடிவு செய்துள்ளார். (ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    இந்த செய்தியை அப்துல்லாஹ் பின் முஅம்மல், இப்னு அபூநஜீஹ் ஆகியோரிடமிருந்து அறிவித்துள்ளார்.)

(நூல்: அல்முதாவீ லிஇலலில் ஜாமிஇஸ் ஸஃகீர்-2966, 5/399)


இந்தச் செய்தி சரியானது என்பதற்கு இவர் கூறும் ஆதாரங்கள்:

முதல் ஆதாரம்:

இப்னு உயைனா அவர்கள் இதை சரியானது என்று கூறியுள்ளார்.

المجالسة وجواهر العلم (2/ 342):
509 – حَدَّثَنَا أَحْمَدُ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، نَا الْحُمَيْدِيُّ؛ قَالَ: كُنَّا عِنْدَ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ فَحَدَّثَنَا بِحَدِيثِ زَمْزَمَ: «أَنَّهُ لِمَا شُرِبَ لَهُ» ، فَقَامَ رَجُلٌ مِنَ الْمَجْلِسِ ثُمَّ عَادَ، فَقَالَ لَهُ: يَا أَبَا مُحَمَّدٍ! أَلَيْسَ الْحَدِيثُ صَحِيحًا الَّذِي حَدَّثْتَنَا بِهِ فِي زَمْزَمَ أَنَّهُ لِمَا شُرِبَ لَهُ؟ فَقَالَ سُفْيَانُ: نَعَمْ. فَقَالَ الرَّجُلُ: فَإِنِّي قَدْ شَرِبْتُ الْآنَ دَلْوًا مِنْ زَمْزَمَ عَلَى أنك تحدثني بمئة حَدِيثٍ. فَقَالَ سُفْيَانُ: اقْعُدْ. ‌فحدثه ‌بمئة ‌حَدِيثٍ.


இப்னு உயைனா அவர்களின் இரண்டு அறிவிப்புகள்:

  • இப்னு உயைனா —> அப்துல்லாஹ் பின் முஅம்மல் —>  அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) 

1 . தாரீகு பஃக்தாத்-4/295.

تاريخ بغداد (4/ 295 ت بشار):
أخبرنا أبو يعلى أحمد بن عبد الواحد، قال: حدثنا أحمد بن الفرج بن محمد الوراق، قال: حدثنا أحمد بن محمد بن سعيد، قال: حدثني محمد بن القاسم بن محمد المدائني، قال: حدثنا مجاهد بن موسى، قال: حدثنا قبيصة، عن سفيان، عن عبد الله بن المؤمل، عن أبي الزبير، عن جابر، أن النبي صلى الله عليه وسلم قال: ‌ماء ‌زمزم ‌لما ‌شرب ‌له. قال قبيصة: وسمعته من عبد الله بن المؤمل.


  • இப்னு உயைனா —> இப்னு அபூநஜீஹ் —> முஜாஹித் —> இப்னு அப்பாஸ் (ரலி) 

2 . பார்க்க: தாரகுத்னீ-2739 , ஹாகிம்-1739 ,


இரண்டாவது ஆதாரம்:

இந்தச் செய்தியை அபுஸ்ஸுபைர் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முஅம்மல் மட்டும் தனித்து அறிவிக்கவில்லை. வேறு சிலரும் அறிவித்துள்ளனர்.

1 . ஹம்ஸா அஸ்ஸய்யாத் அவர்களின் அறிவிப்பு:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-3815 .

2 . இப்ராஹீம் பின் தஹ்மான் அவர்களின் அறிவிப்பு:

பார்க்க: குப்ரா பைஹகீ-9987 .

3 . மேலும் ஜாபிர் (ரலி) அவர்களின் செய்தியாக ஸுவைத் பின் ஸயீத் என்பவர் அறிவித்துள்ளார்.

ஸுவைத் பின் ஸயீத் என்பவரின் அறிவிப்பு (முதாபஅத் காஸிரா):

  • ஸுவைத் பின் ஸயீத் —> இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
    இறப்பு ஹிஜ்ரி 181
    வயது: 63
    —> அப்துர்ரஹ்மான் பின் அபுல்மவாலி —> முஹம்மத் பின் முன்கதிர் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: ஃபவாஇத் அப்துல்ஃகனீ-18, ஷுஅபுல் ஈமான்-3833 ,


  • ஃபவாஇத் அப்துல்ஃகனீ-18.

فوائد عبد الغني بن سعيد الأزدي (ص45):
18- أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ الْغَنِيِّ بْنُ سَعِيدٍ -قِرَاءَةً عَلَيْهِ- قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ الْقَاسِمِ الميانجي قال: حدثنا القاسم بن عباد بالبصرة قال: حدثنا سويد بن سعيد قَالَ: رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُبَارَكِ بِمَكَّةَ أَتَى مَاءَ زَمْزَمَ، فَاسْتَقَى مِنْهُ شَرْبَةً ثُمَّ اسْتَقْبَلَ الْكَعْبَةَ فَقَالَ: اللَّهُمَّ إِنَّ ابْنَ أَبِي الْمَوَالِ حَدَّثَنَا عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: ((مَاءُ زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ)) . وهذا أشربه لعطش الْقِيَامَةِ، ثُمَّ شَرِبَهُ.
سَأَلْتُ الشَّيْخَ وَقْتَ الْقِرَاءَةِ عَلَيْهِ، فَقُلْتُ لَهُ: قَدْ حَجَجْتَ، فَهَلْ شَرِبْتَ مِنْ مَاءِ زَمْزَمَ؟ فَقَالَ لِي: شَرِبْتُهُ مِرَارًا لمثل ذلك.


மூன்றாவது ஆதாரம்:

அப்துல்லாஹ் பின் முஅம்மல், ஸுவைத் பின் ஸயீத் ஆகியோர் பற்றி சிலர் கடுமையாக விமர்சித்திருப்பது சரியான காரணத்தின் அடிப்படையில் அல்ல. இவர்களைப் பற்றி சில நடுநிலையான அறிஞர்கள் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்று கூறியுள்ளனர். இதுவே சரியான கருத்தாகும்.

இவ்வாறே இந்தச் செய்தியை பலவீனமானது என்று கூறியவர்கள் சில அறிவிப்பாளர்தொடர்களை சரியான கண்ணோட்டத்தில் அணுகவில்லை.


இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள்,

1 . இப்னு உயைனா இதை சரியானது என்று கூறியிருப்பதால் அப்துல்லாஹ் பின் முஅம்மல் வழியாக வரும் செய்திகளையும், முஜாஹித் (ரஹ்) வழியாக வரும் செய்திகளையும் இணைத்து இதை சரியானது என்று கூறியுள்ளார்.

2 . இவ்வாறே இந்தச் செய்தியை சரியானது என இப்னுல் ஜவ்ஸீ,பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
ஷரஃபுத்தீன் திம்யாத்தீ, தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான இப்னு தகீகுல் ஈத்,பிறப்பு ஹிஜ்ரி 625
இறப்பு ஹிஜ்ரி 702
வயது: 77
தகிய்யுத்தீன் ஸுப்கீ, முன்திரீ, ஸுயூத்தீ, அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஆகியோர் கூறியுள்ளனர்.

3 . இப்னுல் கய்யிம் அவர்கள், இதை ஹஸன் தர செய்தி என்று கூறியுள்ளார்.

4 . ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் இது ஹஸன் தர செய்தி என்பதற்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

5 . மேலும் சிலர், ஸம்ஸம் நீரை அருந்தும்போது கேட்கும் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதை அனுபவ ரீதியாகவும் காணமுடிகிறது என்பதையும் கூறி இந்தச் செய்தியை உறுதிப்படுத்துகின்றனர்.


பலவீனம் என்று கூறுவோரின் காரணம்:

இந்தச் செய்தியை அப்துல்லாஹ் பின் முஅம்மல் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். மற்றவர்கள் அறிவித்ததாக வரும் செய்திகளில் தவறு உள்ளது. எனவே இது பலவீனமான செய்தி.


1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-14137 , 23723 , அஹ்மத்-14849 , 14996 , இப்னு மாஜா-3062 , அல்முஃஜமுல் அவ்ஸத்-849 , 3815 , 9027 , குப்ரா பைஹகீ-9660 , 9987 , …


2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரகுத்னீ-2739 .


3 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஸுனன் ஸகீர் பைஹகீ-1743 .


4 . முஜாஹித் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-9124 .


 

 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3061 , முஸ்லிம்-4878 ,

3 comments on Ibn-Majah-3062

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    “மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “இறையச்சமும் நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள். “நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்?” என கேட்கப்பட்ட போது, “வாயும் பாலுறுப்பும்” என பதிலளித்தார்கள்.

    அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

    நூல்கள்: அஹ்மத் 7566, திர்மிதீ, 1927 இப்னு மாஜா 4236

    இந்த பதிவின் தரம்?

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.