தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-29579

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு பசிப்பதாகக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தனது வீடுகளுக்கு சென்றார்கள். பிறகு வந்து (இந்த) முஹம்மதின் குடும்பத்தாரின் வீடுகளில் உனக்கு உணவளிக்க எதையும் நான் காணவில்லை என்று கூறினார்கள். சிறிது நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பொறித்த ஆடு (அல்லது ஒரு தட்டு ஸரீத் உணவு) அன்பளிப்பாக வந்தது.

அதை நபி (ஸல்) அவர்கள், கிராமவாசியிடம் கொடுத்து சாப்பிடு! என்று கூறினார்கள். அவர் சாப்பிட்டார். பிறகு அவர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏற்பட்ட பசிக்கு உங்கள் முன்னிலையில் அல்லாஹ் எனக்கு உணவளித்தான். நான் உங்களிடம் இல்லாதபோது எனக்கு பசி ஏற்பட்டால் என்ன செய்வது? என்று கூறுங்கள்” என்று கூறினார். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக, வ ரஹ்மதிக; ஃப இன்னஹூ லா யம்லிகுஹா இல்லா அன்த. (பொருள்: யா அல்லாஹ்! உனது நற்பாக்கியத்திலிருந்தும், அருளிலிருந்தும் உன்னிடம் கேட்கிறேன். உன்னைத் தவிர அதற்கு அதிகாரம் படைத்தவர்கள் வேறு எவரும் இல்லை) என்று கூறு! அல்லாஹ் உனக்கு உணவளிப்பான்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: இப்ராஹீம் நகஈ (ரஹ்), முஜாஹித் (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 29579)

حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ حُصَيْنٍ، قَالَ: الْتَقَى إِبْرَاهِيمُ، ومُجَاهِدٌ، فَقَالَ:

جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَكَا إِلَيْهِ الْجُوعَ، قَالَ: فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بُيُوتِهِ ثُمَّ خَرَجَ، فَقَالَ: «مَا وَجَدْتُ لَكَ فِي بُيُوتِ آلِ مُحَمَّدٍ شَيْئًا»، قَالَ: فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ جَاءَتْهُ شَاةٌ مَصْلِيَّةٌ، وَقَالَ الْآخَرُ: جَاءَتْهُ قَصْعَةٌ مِنْ ثَرِيدٍ، فَوُضِعَتْ بَيْنَ يَدَيِ الْأَعْرَابِيِّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اطْعَمْ»، قَالَ: فَأَكَلَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَصَابَنِي الَّذِي أَصَابَنِي، فَرَزَقَنِي اللَّهُ عَلَى يَدَيْكَ، أَفَرَأَيْتَ إِنْ أَصَابَنِي، وَأَنَا لَسْتُ عِنْدَكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” قُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ، فَإِنَّهُ لَا يَمْلِكُهُمَا إِلَّا أَنْتَ، فَإِنَّ اللَّهَ رَازِقُكَ


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-29579.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-29000.




  • இது முஜாஹித் அவர்களின் வழியாக முர்ஸலான செய்தி. இப்ராஹீம் நகஈ அவர்கள் வழியாக முஃளலான செய்தி.

(குறிப்பு: மேற்கண்ட செய்தியை இப்ராஹீம் நகஈ (ரஹ்), முஜாஹித் (ரஹ்) இருவரும் கூறினார்கள் என்று சில பிரதிகளிலும், வேறு சில நூலிலும் வந்துள்ளது. அதுவே சரியானதாகும்)


2 . இந்தக் கருத்தில் முஜாஹித் (ரஹ்), இப்ராஹீம் நகஈ (ரஹ்) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அத்துஆஉ லிமுஹம்மது பின் ஃபுளைல்-1, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29579 ,


الدعاء للضبي (ص: 157)
1 – أَخْبَرَنَا الشَّرِيفُ الْإِمَامُ أَبُو الْبَرَكَاتِ عُمَرُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ بْنِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ حَمْزَةَ بْنِ يَحْيَى بْنِ الْحُسَيْنِ بْنِ زَيْدِ بْنِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ الْكُوفِيُّ النَّحْوِيُّ، بِقِرَاءَتِي عَلَيْهِ بِالْكُوفَةِ فِي مَسْجِدِ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيِّ بِمَحِلَّةِ السَّبِيعِ فِي الْعَاشِرِ مِنْ ذِي الْقِعْدَةِ سَنَةَ إِحْدَى وَعِشْرِينَ وَخَمْسِمِائَةٍ فَأَقَرَّ بِهِ، قَالَ: أَخْبَرَنَا أَبُو الْفَرَجِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ مُحَمَّدِ بْنِ عَلَّانَ الْمَعْرُوفُ بِابْنِ الْخَازِنِ الْمُعَدِّلُ قِرَاءَةً عَلَيْهِ فِي ذِي الْحِجَّةِ سَنَةَ ثَمَانٍ وَسِتِّينَ وَأَرْبَعِمِائَةِ، قَالَ: أَخْبَرَنَا الْقَاضِي أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحُسَيْنِ الْجُعْفِيُّ، قِرَاءَةُ عَلَيْهِ قَالَ: أَخْبَرَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ بْنِ رِيَاحٍ الْأَشْجَعِيُّ، قِرَاءَةً عَلَيْهِ مِنْ أَصْلِهِ، وَأَقَرَّ بِهِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُنْذِرٍ،


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ، عَنْ إِبْرَاهِيمَ، وَمُجَاهِدٍ قَالَا: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ , فَشَكَا إِلَيْهِ الْجُوعَ، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ خَرَجَ فَقَالَ: «مَا أَجِدُ لَكَ فِي آلِ مُحَمَّدٍ طَعَامًا أُطْعِمُكَاهُ» . فَقَامَ أَحَدُهُمَا , فَأَهْدَى لَهُ شَاةً مَصْلِيَّةً، وَقَالَ الْآخَرُ: حِفْنَةٌ مِنْ ثَرِيدٍ , فَوُضِعَتْ بَيْنَ يَدَيْهِ , فَقَالَ: «اطْعَمْ» , فَطَعِمَ , فَلَمَّا شَبِعَ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَصَابَنِي مَا أَصَابَنِي , فَأَتَيْتُكَ، فَرَزَقَنِي اللَّهُ هَذَا عَلَى يَدَيْكَ، أَفَرَأَيْتَ إِنْ أَصَابَنِي هَذَا , وَلَسْتُ عِنْدَكَ، فَكَيْفَ أَصْنَعُ؟ قَالَ: قُلِ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ، وَرَحْمَتِكَ , فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ، فَإِنَّ اللَّهَ رَازِقُكَ»


மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10379 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.