தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-2562

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன்.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று நபர்களை அல்லாஹ் மறுமை நாளில் (கருணைக் கண்கொண்டு) பார்க்க மாட்டான்.

1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவன்.
2. ஆண்களைப் போன்று வேடமிடக்கூடிய பெண்.
3. தன்னுடைய மனைவி தவறான நடத்தை கொண்டவளாக இருப்பதை அறிந்தும் ரோஷம் கொள்ளாத கணவன் ஆகியோராவர்.

இன்னும் மூன்று நபர்கள் சுவர்க்கம் புகமாட்டார்கள்.

1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவன்.
2. நிரந்தரமாக மது அருந்துபவன்.
3. கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(நஸாயி: 2562)

الْمَنَّانُ بِمَا أَعْطَى

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

ثَلَاثَةٌ لَا يَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ: الْعَاقُّ لِوَالِدَيْهِ، وَالْمَرْأَةُ الْمُتَرَجِّلَةُ، وَالدَّيُّوثُ، وَثَلَاثَةٌ لَا يَدْخُلُونَ الْجَنَّةَ: الْعَاقُّ لِوَالِدَيْهِ، وَالْمُدْمِنُ عَلَى الْخَمْرِ، وَالْمَنَّانُ بِمَا أَعْطَى


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-2515.
Nasaayi-Shamila-2562.
Nasaayi-Alamiah-2515.
Nasaayi-JawamiulKalim-2528.




(குறிப்பு: மேற்கண்ட செய்தியில் கூறப்பட்டுள்ள பாவங்கள் இணைவைப்பு போன்ற பாவங்கள் அல்ல. எனவே இந்த பாவங்களுக்கு குறிப்பிட்டக் காலம் வரை அல்லாஹ் தண்டனை தந்துவிட்டு பிறகு சொர்க்கத்திற்கு அனுப்புவான். இந்த பாவங்களைச் செய்யக் கூடாது என்பதற்குத்தான் இவ்வாறு நபி (ஸல்) கடுமையாகக் கூறியுள்ளார்கள்.)


இந்தச் செய்தி பலவகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26297-அப்துல்லாஹ் பின் யஸார் அல்அஃரஜ், அல்மக்கீ என்பவர் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) அவர்களின் அடிமையாவார்.
  • இவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • இவரிடமிருந்து நான்கு பேர் அறிவித்துள்ளனர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் கூறியுள்ளார். மேலும் இவரை, மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/460, தக்ரீபுத் தஹ்தீப்-1/559…)


  • தாபிஈன்களில் இதுபோன்ற நிலையில் உள்ளவர்களை சில ஹதீஸ்கலை அறிஞர்கள் ஹஸன் தரத்தில் உள்ளவர்கள் என்று கருதுகின்றனர்.
  • இந்தச் செய்தி வேறுசில அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளதால் இது ஸஹீஹுன் லிஃகைரிஹீ ஆகும்.

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

2 comments on Nasaayi-2562

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    இதனுடைய தரம் பற்றி பதிவிடவும்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.