தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-458

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

முஸ்லிமான பெரியோருக்கு மரியாதை செய்வதையும், சிறியோருக்கு இரக்கம் காட்டுவதையும் விட்டுவிடுவது பற்றி வந்துள்ள கண்டனம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும், சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், நன்மையை ஏவி, தீமையைத் தடுக்காதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(இப்னு ஹிப்பான்: 458)

ذِكْرُ الزَّجْرِ عَنْ تَرْكِ تَوْقِيرِ الْكَبِيرِ أَوْ رَحْمَةِ الصِّغَارِ مِنَ الْمُسْلِمِينَ

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَشِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرِ الْكَبِيرَ، وَيَرْحَمِ الصَّغِيرَ، وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-458.
Ibn-Hibban-Shamila-458.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-463.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் ஜரீர் அவர்களுக்கும், அப்துல்மலிக் அவர்களுக்கும் இடையில் லைஸ் பின் அபூஸுலைம் விடப்பட்டுள்ளார். மற்ற அறிவிப்பாளர்தொடர்களிலிருந்து இது தெரிகிறது. ளியாவுத்தீன் மக்திஸீ அவர்களும், ஜரீர் அவர்கள் அப்துல்மலிக் அவர்களிடம் இந்த ஹதீஸை செவியேற்கவில்லை என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்அஹாதீஸுல் முக்தாரஹ்)

  • மேலும் ராவீ-34781-லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் மூளைக்குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை; எனவே இவர் கைவிடப்பட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இந்த அறிவிப்பாளர்தொடரை பலவீனமானது என்றும்; இதில் வரும் நன்மை, ஏவி தீமையைத் தடுத்தல் என்ற கூடுதல் பகுதியை பலவீனமானது என்றும்; லைஸ் பின் அபூஸுலைமின் காரணமாகவே இந்த அறிவிப்பாளர்தொடரில் குளறுபடி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அள்ளயீஃபா-2108)

3 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-2329 , திர்மிதீ-1921 , இப்னு ஹிப்பான்-458 , 464 , ஷுஅபுல் ஈமான்-10474 ,

  • லைஸ் பின் அபூஸுலைம் —> முஜாஹித் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11083 ,

  • மின்ஹால் பின் அம்ர் —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-12276 ,

சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-4943 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.