தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1197

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

சோதனைகளின் போது ஸஜ்தா செய்வது.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா-ரலி, அல்லது ஹஃப்ஸா-ரலி) மரணித்து விட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சொல்லப்பட்டது. உடனே அவர்கள், ஸஜ்தாவில் விழுந்தார்கள். அப்போது அவர்களிடம் (மரண செய்தி கேட்டு) ஸஜ்தா செய்கிறீர்களே? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், “ஏதேனும் ஒரு சோதனை -(துன்பத்தை) நீங்கள் கண்டால் (அல்லது கேட்டால்), ஸஜ்தா செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவியர் இறப்பதைவிட பெரும் துன்பம் அளிக்கும் சோதனை வேறு எதுவாக இருக்க முடியும்? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(அபூதாவூத்: 1197)

بَابُ السُّجُودِ عِنْدَ الْآيَاتِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي صَفْوَانَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سَلْمُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْحَكَمِ بْنِ أَبَانَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ:

قِيلَ لِابْنِ عَبَّاسٍ: مَاتَتْ فُلَانَةُ – بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – فَخَرَّ سَاجِدًا، فَقِيلَ لَهُ: أَتَسْجُدُ هَذِهِ السَّاعَةَ؟ فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا»، وَأَيُّ آيَةٍ أَعْظَمُ مِنْ ذَهَابِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1012.
Abu-Dawood-Shamila-1197.
Abu-Dawood-Alamiah-1012.
Abu-Dawood-JawamiulKalim-1014.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-13727-ஹகம் பின் அபான் என்பவர் பற்றி சிலர் பலமானவர் என்று கூறியிருந்தாலும் இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
    இறப்பு ஹிஜ்ரி 181
    வயது: 63
    அவர்கள் இவரை தூக்கி எறியுங்கள் என்று கூறியுள்ளார். (இதன் கருத்து இவர் மிக பலவீனமானவர் என்பதாகும்).
  • இவரிடம் சிறிது பலவீனம் உள்ளது என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் கூறியுள்ளார்.
  • இவரின் செய்தியை ஆதாரமாக ஏற்பதை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர் என்று இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/461, …)

  • என்றாலும் இவரை மற்ற பெரும் அறிஞர்களான இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்னு நுமைர்,பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்ற பலர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இவரைப் பற்றிய விமர்சனம் சரியானதல்ல என்றும், இவரின் செய்தியில் ஏற்பட்ட தவறுகளுக்கு இவரின் மகன் இப்ராஹீம் என்பவரே காரணம் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் கூறியுள்ளார். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    போன்ற அறிஞர்கள் இவ்வாறே முடிவு செய்துள்ளனர்.

(நூல்: அல்காஷிஃப்-2/302)

என்றாலும், ஹகம் பின் அபான் அவர்கள் இக்ரிமாவிடமிருந்து பல செய்திகளை தனித்து அறிவித்துள்ளார்…

  • இந்த செய்தியை இவரிடமிருந்து ஸல்ம் பின் ஜஃபர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். இந்தக் கருத்தில் ஹகம் பின் அபான் அவர்களிடமிருந்து அவரின் மகன், இப்ராஹீம் பின் ஹகம் என்பவரும், ஹஃப்ஸ் பின் உமர், காலித் பின் யஸீத் ஆகியோரும் அறிவித்திருந்தாலும் இம்மூவரும் மிக பலவீனமானவர்கள் என்பதால் ஸல்ம் பின் ஜஃபர் மட்டுமே தனித்து அறிவிக்கிறார் என்பதால் இது ஃகரீப்-அரிதான செய்தியாகி விடுகிறது.

  • ஹகம் பின் அபான், ஸல்ம் பின் ஜஃபர் ஆகியோரை ஆதாரமாக ஏற்காதவர்கள் இந்த செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.
  • இருவரையும் ஆதாரமாக ஏற்கக்கூடியவர்கள் இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.

1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரீகுல் கபீர்-2317, அபூதாவூத்-1197 , திர்மிதீ-3891 , அல்முஃஜமுல் கபீர்-11618 , குப்ரா பைஹகீ-6379 ,


  • தாரீகுல் கபீர்-2317.

التاريخ الكبير للبخاري (4/ 158 ت المعلمي اليماني):
2317 – سلم بْن جَعْفَر، حَدَّثَنِي مُحَمَّدُ بن صَفْوَانَ (نا) يَحْيَى بْنُ كَثِيرٍ أَبُو غَسَّانَ (نا) سَلْمُ بْنُ جَعْفَر عَنِ الْحَكَمِ بْن أَبَانٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْن عَبَّاسٍ قِيلَ مَاتَتْ فُلانَةٌ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَجَدَ وَقَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا – وَأَيُّ آيَةٍ أَشَدُّ مِنْ ذَهَابِ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2774 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.