பாடம்:
(அல்லாஹ்விற்கு) நன்றி தெரிவிக்க ஸஜ்தா செய்வது.
நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்தாலோ அல்லது அது குறித்து நற்செய்தி கூறப்பெற்றாலோ உடனே அல்லாஹ்விற்கு நன்றி தெரிவிக்க ஸஜ்தாவில் விழுவார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
(அபூதாவூத்: 2774)
بَابٌ فِي سُجُودِ الشُّكْرِ
حَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ أَبِي بَكْرَةَ بَكَّارِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، أَخْبَرَنِي أَبِي عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ كَانَ «إِذَا جَاءَهُ أَمْرُ سُرُورٍ أَوْ بُشِّرَ بِهِ خَرَّ سَاجِدًا شَاكِرًا لِلَّهِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2393.
Abu-Dawood-Shamila-2774.
Abu-Dawood-Alamiah-2393.
Abu-Dawood-JawamiulKalim-2396.
இந்தச் செய்தி சில அறிவிப்பாளர்தொடர்களில் இரண்டு பகுதிகளாக வந்துள்ளது. மேற்கண்ட செய்தி முதல் பகுதியாகும்.
- இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் (நாம் பார்த்தவரை) பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்தியில் மட்டும் விமர்சனம் இல்லை. மற்ற செய்திகளில் விமர்சனம் உள்ளது.
பார்க்க: குப்ரா பைஹகீ-3932 .
- இந்த ஹதீஸின் அடிப்படையில் ஸஜ்ததுஷ் ஷுக்ர்- அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காக தனியாக ஸஜ்தா செய்வது மார்க்கத்தில் உள்ள அம்சம் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இந்தக் கருத்தில் வரும் செய்திகளை குறிப்பிட்டு இந்த செய்தி சரியானது என்று கூறியுள்ளார்.
(நூல்: இர்வாஉல் ஃகலீல்-474)
1 . இந்தக் கருத்தில் அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
ஸஜ்ததுஷ் ஷுக்ர்-நன்றிக்கான ஸஜ்தா பற்றிய செய்திகள்:
- பக்கார் பின் அப்துல்அஸீஸ் —> (இவரின் தந்தை) அப்துல்அஸீஸ் —> (பக்காரின் பாட்டனார்) அபூபக்ரா (ரலி)
பார்க்க: இப்னு மாஜா-1394 , அபூதாவூத்-2774 , திர்மிதீ-1578 , முஸ்னத் பஸ்ஸார்-3682 , தாரகுத்னீ-1529 , 1530 , 4285 , ஹாகிம்-1025 , குப்ராபைஹகீ-3934 ,
நன்றிக்கான ஸஜ்தா பற்றியும்; ஆண், பெண்ணுக்கு கட்டுப்படுவது பற்றியும் கூறப்பட்டுள்ள செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-20455 , முஸ்னத் பஸ்ஸார்-3692 , அல்முஃஜமுல் அவ்ஸத்-425 , ஹாகிம்-7789 ,
ஆண், பெண்ணுக்கு கட்டுப்படுதல் என்ற 2 வது பகுதி மட்டும் கூறப்பட்டுள்ள செய்திகள்:
பார்க்க: அக்பாரு அஸ்பஹான்-1357 ,
2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1392 .
3 . அபூஜுஹைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஹில்யதுல் அவ்லியா-10728 ,
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ الْيَقْطِينِيُّ، ثنا حَامِدُ بْنُ شُعَيْبٍ، ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْأَزْدِيُّ، ثنا دَاوُدُ بْنُ الْمُحَبَّرِ، عَنْ عَدِيِّ بْنِ الْفَضْلِ، عَنْ مِسْعَرٍ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِي جُحَيْفَةَ،
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَهُ بَشِيرٌ فَخَرَّ سَاجِدًا»
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து நற்செய்தி கூறியவுடன் நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் விழுந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28301-அதீ பின் ஃபள்ல், ராவீ-15216-தாவூத் பின் முஹப்பர் ஆகியோர் மிக பலவீனமானவர்கள்; கைவிடப்பட்டவர்கள் என்று விமர்சிக்கப்பட்டவர்கள் ஆவர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/672, 1/308)
4 . ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-2775 .
5 . அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-1664 .
6 . பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-3932 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-1197 ,
சமீப விமர்சனங்கள்