தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-3932

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(அல்லாஹ்விற்கு) நன்றி தெரிவிக்க ஸஜ்தா செய்தல்.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், யமன்வாசிகளை இஸ்லாத்திற்கு அழைப்பதற்காக  காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களை(யும், உடன் சிலரையும்) அனுப்பி வைத்தார்கள். என்றாலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. (இந்த செய்தியை கடிதம் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் திரும்பி செல்ல ஆரம்பித்தனர்). அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் காலித் பின் வலீதின் இடத்தில் அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அலீயே! காலிதின் சகாக்களில் ‘உங்களைத் தொடர்ந்து (யமன் நாட்டுக்கு) வரவிரும்புவர் தொடர்ந்து வரட்டும்! (மதீனாவை முன்னோக்கிச் செல்ல) விரும்புபவர் முன்னோக்கிச் செல்லட்டும்!’ என்று அவர்களுக்கு உத்தரவிடுங்கள்’ என்று கூறினார்கள். நான் அலீ (ரலி) அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களில் ஒருவனாயிருந்தேன்.

பிறகு நாங்கள் யமன்வாசிகளை நோக்கி சென்று அவர்களை நெருங்கி விட்டோம். அவர்கள் எங்களிடம் வந்தனர். அங்கு அலீ (ரலி) அவர்கள் எங்களுக்கு தொழுகை நடத்தினார். பிறகு எங்களை ஒரே வரிசையில் நிற்க வைத்து யமன்வாசிகளுக்கு நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை படித்துக் காட்டினார். எனவே (யமன் வாசிகளான) ஹம்தான் கிளையினர் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றனர். உடனே அலீ (ரலி) அவர்கள், இவர்கள் இஸ்லாத்தை ஏற்ற செய்தியை நபி (ஸல்) அவர்களுக்கு கடிதத்தின் மூலம் அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் இதைப் படித்தபோது ஸஜ்தாவில் விழுந்தார்கள். பின்பு அவர்கள் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி, “அஸ்ஸலாமு அலா ஹம்தான்; அஸ்ஸலாமு அலா ஹம்தான்” (ஹம்தான் கிளையினர் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக!) என்று கூறினார்கள்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியின் ஆரம்ப பகுதியை புகாரி இமாம், அஹ்மத் பின் உஸ்மான் —> ஷுரைஹ் பின் மஸ்லமா —> இப்ராஹீம் பின் யூஸுஃப் …என்ற அறிவிப்பாளர்தொடரில் பதிவுசெய்துள்ளார். முழு செய்தியையும் பதிவு செய்யவில்லை. ஸஜ்ததுஷ் ஷுக்ர் (அல்லாஹ்விற்கு) நன்றி தெரிவிக்க ஸஜ்தா செய்வது) பற்றி வரும் இந்த முழு செய்தியும் புகாரி இமாமின் நிபந்தனையின்படி உள்ள சரியான செய்தியாகும்.

(பைஹகீ-குப்ரா: 3932)

بَابُ سُجُودِ الشُّكْرِ

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو إِسْحَاقَ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى الْمُزَكِّي أنبأ أَبُو عَبْدِ اللهِ أَحْمَدُ بْنُ عَلِيٍّ الْجَوْزَجَانِيُّ ثنا أَبُو عُبَيْدَةَ بْنُ أَبِي السَّفَرِ، ح وَأَخْبَرَنَا أَبُو عَمْرٍو الْأَدِيبُ، أنبأ أَبُو بَكْرٍ الْإِسْمَاعِيلِيُّ، أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ زِيدَانَ، وَمُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ خَالِدٍ أَبُو جَعْفَرٍ الْقَمَّاطُ الْكُوفِيَّانِ قَالَا: ثنا أَبُو عُبَيْدَةَ بْنُ أَبِي السَّفَرِ قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ بْنَ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ قَالَ:

بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى أَهْلِ الْيَمَنِ يَدْعُوهُمْ إِلَى الْإِسْلَامِ فَلَمْ يُجِيبُوهُ، ثُمَّ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَأَمَرَهُ أَنْ يَقْفُلَ خَالِدٌ وَمَنْ كَانَ مَعَهُ إِلَّا رَجُلٌ مِمَّنْ كَانَ مَعَ خَالِدٍ أَحَبَّ أَنْ يُعَقِّبَ مَعَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ فَلْيُعَقِّبْ مَعَهُ قَالَ الْبَرَاءُ فَكُنْتُ مِمَّنْ عَقَّبَ مَعَهُ، فَلَمَّا دَنَوْنَا مِنَ الْقَوْمِ خَرَجُوا إِلَيْنَا فَصَلَّى بِنَا عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ وَصَفَّنَا صَفًّا وَاحِدًا، ثُمَّ تَقَدَّمَ بَيْنَ أَيْدِينَا، فَقَرَأَ عَلَيْهِمْ كِتَابَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَتْ هَمْدَانُ جَمِيعًا، فَكَتَبَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِسْلَامِهِمْ، فَلَمَّا قَرَأَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكِتَابَ خَرَّ سَاجِدًا، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ: ” السَّلَامُ عَلَى هَمْدَانَ السَّلَامُ عَلَى هَمْدَانَ

أَخْرَجَ الْبُخَارِيُّ صَدْرَ هَذَا الْحَدِيثِ، عَنْ أَحْمَدَ بْنِ عُثْمَانَ، عَنْ شُرَيْحِ بْنِ مَسْلَمَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ يُوسُفَ، فَلَمْ يَسُقْهُ بِتَمَامِهِ، وَسُجُودُ الشُّكْرِ فِي تَمَامِ الْحَدِيثِ صَحِيحٌ عَلَى شَرْطِهِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-3932.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.




(குறிப்பு: இந்த செய்தியில் فَلَمَّا قَرَأَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكِتَابَ  நபி (ஸல்) அவர்கள் கடிதத்தை படித்தார்கள் என்று இடம்பெற்றிருந்தாலும் நபி (ஸல்) அவர்களுக்கு படிக்க தெரியாது என்பதால் அவர்கள் படித்திருக்க மாட்டார்கள். வேறு ஒருவர் படித்து காட்டியிருப்பார். இவ்வாறு மற்றவர் படித்து காட்டுவதால் செய்தியை தெரிந்துகொள்பவருக்கும் قَرَأَ என்று கூறப்படும் என்று சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்)


6 . இந்தக் கருத்தில் பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-4349 , முஸ்னத் ரூயானீ-304 , குப்ரா பைஹகீ-3932 ,


  • முஸ்னத் ரூயானீ-304.

نا أَبُو كُرَيْبٍ، نا يَحْيَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ:

بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى الْيَمَنِ يَدْعُوهُمْ إِلَى الِإِسْلَامِ، فَكُنْتُ فِيمَنْ سَارَ مَعَهُ، فَأَقَامَ عَلَيْهِمْ تِسْعَةَ أَشْهُرٍ لَا يُجِيبُونَهُ إِلَى شَيْءٍ، فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فِي أَثَرِهِ، وَأَمَرَهُ أَنْ يَقْفِلَ خَالِدُ بْنُ الْوَلِيدِ وَمَنْ مَعَهُ، فَإِنْ أَرَادَ أَحَدٌ مِمَّنَ كَانَ مَعَ خَالِدِ بْنِ الْوَلِيدِ أَنْ يُعَقِّبَ مَعَهُ تَرَكَهُ، قَالَ الْبَرَاءُ: فَكُنْتُ مِمَّنْ عَقَّبَ مَعَ عَلِيٍّ إِلَى أَوَائِلِ أَهْلِ الْيَمَنِ، فَجَمَعُوا لَهُ، قَالَ: فَصَلَّى بِنَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ الْفَجْرَ، فَلَمَّا فَرَغَ صَفَّنَا صَفًّا وَاحِدًا ثُمَّ تَقَدْمَ بَيْنَ أَيْدِينَا، فَحَمِدَ اللَّهَ وَأثْنَى عَلَيْهِ، ثُمَّ قَرَأَ عَلَيْهِمْ كِتَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمَتْ هَمْدَانُ كُلُّهَا فِي يَوْمٍ وَاحِدٍ، فَكَتَبَ بِذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا قَرَأَ كِتَابَهُ كَبَّرَ جَالِسًا، ثُمَّ سَجَدَ فَقَالَ: «السَّلَامُ عَلَى هَمْدَانَ» ثَلَاثًا فَتَتَابَعَ أَهْلُ الْيَمَنِ عَلَى الِإِسْلَامِ

….


மேலும் பார்க்க: அபூதாவூத்-2774 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.