தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

بسم الله الرحمن الرحيم

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

முன்னுரை:

அத்தியாயம்: 1

இறைநம்பிக்கை, நபித்தோழர்களின் சிறப்புகள், கல்வி.

பாடம்: 1

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறையை பின்பற்றுவது.

1 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு கட்டளையிட்டால்  அதை நீங்கள் கடைபிடியுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடைவிதித்தால் அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify


بسم الله الرحمن الرحيم

(وصلى الله على سيدنا محمد وآله وصحبه ومحبيه)

[افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم]

بَابُ اتِّبَاعِ سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَا أَمَرْتُكُمْ بِهِ فَخُذُوهُ، وَمَا نَهَيْتُكُمْ عَنْهُ فَانْتَهُوا»


Ibn-Majah-Tamil-1.
Ibn-Majah-TamilMisc-1.
Ibn-Majah-Shamila-1.
Ibn-Majah-Alamiah-1.
Ibn-Majah-JawamiulKalim-1.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஷரீக் பின் அப்துல்லாஹ் பற்றி, இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், அதிகம் தவறிழைப்பவர் என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-2802)

  • என்றாலும் இந்த செய்தியை அஃமஷ் அவர்களிடமிருந்து வேறு சிலரும் அறிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க: புகாரி-7288 .

7 comments on Ibn-Majah-1

  1. யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்க வில்லையோ அவர் நம்முடைய துழும் இடத்திற்கு வர வேண்டாம்
    இப்னுமாஜா 323

    இதன் உண்மைத் தன்மை என்ன

      1. நீங்கள் எல்லா ஹதீஸ்களையும் மொழிப்பெயர்ப்பு செய்துவிட்டீர்களா?
        https://sunnah.com/ibnmajah:4036
        இந்த ஹதீஸை மொழிபெயர்ப்பு செய்து அதன் தரத்தை விவரியுங்கள்.

        1. அஸ்ஸலாமு அலைக்கும்.
          இன்னும் எல்லா ஹதீஸ்களையும் மொழிப்பெயர்ப்பு செய்யவில்லை. பணிகள் நடைப்பெற்று வருகிறது. துஆச் செய்யவும்.
          பார்க்க: இப்னு மாஜா-4036 .

          1. அல்ஹம்துலில்லாஹ். பணிகள் நடைப்பெறட்டும்.
            உங்கள் கான்டெக்ட் பண்ண முடியுமா?

            அமயம் சமயம் முக்கியமாக நேரங்களில் சில ஹதீஸ்களின் மொழிப்பெயர்ப்புகள் தேவைப்படுகிறது.

            அதை கேட்டால் மொழிப்பெயர்ப்பு செய்து தருவீர்களா?

            உங்களை தொடர்புக்கொண்டால் சுலபமாக மொழிபெயர்ப்பு கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்.

            தொடர்புக்கொள்ளலாமா?

  2. அல்லாஹ்வின் தூதர் கூறினார்: “திருமணம் எனது சுன்னாவின் ஒரு பகுதியாகும், என் சுன்னாவைப் பின்பற்றாதவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. திருமணம் செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் நான் உங்கள் பெரிய எண்ணிக்கையை தேசங்களுக்கு முன்பாக பெருமைப்படுத்துவேன். யாருக்கு வசதி இருக்கிறதோ, அவர் திருமணம் செய்து கொள்ளட்டும், யார் செய்யவில்லையோ, அவர் நோன்பு நோற்பது அவரது ஆசையை குறைக்கும்.

    இந்த ஹதீஸ் இடம் பெரும் நம்பர் சொல்லுங்கள்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.