7278. வஹ்ப் பின் தாவூத் பின் ஸுலைமான்-அபுல்காஸிம்-அல்மக்ரமீ.
இவர் இஸ்மாயீல் பின் உலய்யா அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.
இவரிடமிருந்து முஹம்மது பின் ஜஃபர் அல்மதீரீ என்பவர் அறிவித்துள்ளார். இவர் பார்வையற்றவர். பலமானவர் அல்ல.
நான் நபி (ஸல்) அவர்களின் அருகில் நின்றிருந்தபோது, “வெள்ளிக்கிழமை யார் என்மீது 80 தடவை ஸலவாத் சொல்வாரோ அவரின் 80 வருட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “உங்கள் மீது எவ்வாறு ஸலவாத் கூற வேண்டும்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக, வ நபிய்யிக, வரஸூலிகன் நபிய்யில் உம்மிய்யி என்று நீ கூறி ஒரு தடவை (கையால்) எண்ணிக் கொள்ளவேண்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(தாரீகு பக்தாத்: 4578) 7278 – وهب بن داود بن سليمان أبو القاسم المخرمي حدث عن: إِسْمَاعِيل ابن علية.
روى عنه: مُحَمَّد بن جعفر المطيري، وكان ضريرا، ولم يكن ثقة.
أَخْبَرَنَا أَبُو طَالِبٍ عُمَرُ بْنُ إِبْرَاهِيمَ الْفَقِيهُ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ إِبْرَاهِيمَ الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْمَطِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ دَاوُدَ بْنِ سُلَيْمَانَ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:
كُنْتُ وَاقِفًا بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: مَنْ صَلَّى عَلَيَّ يَوْمَ الْجُمُعَةِ ثَمَانِينَ مَرَّةً غَفَرَ اللَّهُ لَهُ ذُنُوبَ ثَمَانِينَ عَامًا، فَقِيلَ لَهُ: كَيْفَ الصَّلاةُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: تَقُولُ: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَنَبِيِّكَ وَرَسُولِكَ النَّبِيِّ الأُمِّيِّ، وَتَعْقِدُ وَاحِدَةً
Tarikh-Baghdad-Tamil-.
Tarikh-Baghdad-TamilMisc-.
Tarikh-Baghdad-Shamila-4578.
Tarikh-Baghdad-Alamiah-.
Tarikh-Baghdad-JawamiulKalim-4575.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47883-வஹ்ப் பின் தாவூத் பலமானவர் அல்ல என்று இதை பதிவு செய்த கதீப் பக்தாதீ அவர்களே கூறியுள்ளார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: அத்தர்ஃகீபு ஃபீ ஃபளாஇலில் அஃமால்-22 , தாரீகு பஃக்தாத்-4578 ,
இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
அவர்கள் இதை தனது அல்அஹாதீஸுல் வாஹியா என்ற நூலில் கூறியிருப்பதைக் குறிப்பிட்டுவிட்டு இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அள்ளயீஃபா-215)
..அள்ளயீஃபா-3804.
சமீப விமர்சனங்கள்