தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ألفاظ الجرح والتعديل

ஹதீஸ் அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையிலும், நினைவாற்றலிலும் இருக்கும் (جرح , تعديل) குறை நிறைகளை குறிப்பிடுவதற்கு அறிஞர்கள் சில வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இதன்மூலம் அறிவிப்பாளர்களின் தரங்களையும், அவர்கள் இடம்பெறும் ஹதீஸின் தரத்தையும் ஓரளவு நாம் அறிந்துக் கொள்ளலாம்.

முதல் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள்:

1 . (நம்பகத்தன்மையிலும், நினைவாற்றலிலும்) மிகவும் பலமானவர்கள்; உறுதியானவர்கள் என்று குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தைகள்:

1 . أوثق الناس – அவ்ஸகுன் நாஸ் – மக்களில் மிகவும் நம்பிக்கைக்குரியவர்.

2 . أثبت الناس – அஸ்பதுன் நாஸ் – மக்களில் மிகவும் உறுதியானவர்.

3 . إليه المنتهى في التثبت – இலைஹில் முன்தஹா ஃபித்தஸப்புத் – உறுதியின் எல்லையை அடைந்தவர். (உறுதி இவரிடம் முடிகிறது)

4 . ومن مثل فلان – வமன் மிஸ்லு ஃபுலான் – இவரைப் போன்று யார் இருக்கிறார்?

  • இன்னும் இதுபோன்ற மிகையான வார்த்தைகளைக் கொண்டு பாராட்டப்படும் அறிவிப்பாளர்கள் மிகவும் பலமானவர்கள் ஆவார்கள்.

இரண்டாம் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள்:

2 . (நம்பகத்தன்மையிலும், நினைவாற்றலிலும்) பலமானவர்கள் என்பதை உறுதியாக, குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தைகள்:

  • பலமானவர்கள் என்ற கருத்தை தரும் வார்த்தையை இருதடவை குறிப்பிடுவது.

ثقة ثقة – ஸிகத் ஸிகத் (ஸிகஹ்) – நம்பிக்கைக்குரியவர்.

(போன்ற வார்த்தைகள்)

  • ஒரே கருத்தை தரும் வெவ்வேறு வார்த்தைகளை இணைத்துக் கூறுவது.

ثقة حافظ – ஸிகத் ஹாஃபிள் – நம்பிக்கைக்குரியவர்; நினைவாற்றல் உள்ளவர்.

ثقة ثبت – ஸிகத் ஸபத் – நம்பிக்கைக்குரியவர்; உறுதியானவர்.

(போன்ற வார்த்தைகள்)

மூன்றாம் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள்:

3 . (நம்பகத்தன்மையிலும், நினைவாற்றலிலும்) பலமானவர்கள் என்று குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தைகள்:

1 . ثقة – ஸிகத் (ஸிகஹ்) – நம்பிக்கைக்குரியவர்.

2 . متقن – முத்கின் – உறுதியானவர்.

3 . ثبت – ஸபத் – உறுதியானவர்.

4 . عدل – அத்ல் – நீதியாளர் (சிறந்த நற்குணமுடையவர்)

மேற்கண்ட மூன்று தரத்தில் உள்ள அறிவிப்பாளர்களுக்கிடையில் சிறிது வித்தியாசம் இருந்தாலும் இவர்கள் இடம்பெறும் செய்திகள் ஸஹீஹ்-சரியான ஹதீஸ் என்ற தரமாகும்.

என்றாலும் மிகப் பலமானவர்களுக்கு மாற்றமாக பலமானவர் அறிவிக்கும் போது பலமானவரின் செய்தி ஆதாரத்தின் அடிப்படையில் மறுக்கப்படும்.

நான்காம் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள்:

4 . நம்பகமானவர்கள் என்று குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தைகள்:

1 . صدوق – ஸதூக் – நம்பகமானவர்.

2 . لا بأس به – லா பஃஸ பிஹீ – இவர் பரவாயில்லை.

3 . ليس به بأس – லைஸ பிஹீ பஃஸ் – இவர் பரவாயில்லை.

(2, 3 இல் இடம்பெரும் வார்த்தைகளை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் பலமானவர்களுக்கும் கூறியுள்ளார்)

4 . مأمون – மஃமூன் – இவரை நம்பலாம்.

5 . خيار – கியார் – நல்லவர்

  • இவர்களில் சிலர் இடம்பெறும் செய்திகள் ஸஹீஹ் என்ற தரத்தையும் அடையும். சிலர் இடம்பெறும் செய்திகள் ஹஸன் லிதாதிஹீ என்ற தரத்தையும் அடையும்.

1 . ஒரு செய்தி இதே தரத்தில் உள்ளவர்கள் வழியாக இரண்டு அறிவிப்பாளர்தொடரில் வந்துவிட்டாலும் அதை ஸஹீஹ் லிஃகைரிஹீ என்று சிலர் குறிப்பிடுவர்.

2 . இவ்வாறே ஒரு செய்தி ஹஸன் லிதாதிஹீ என்ற தரத்தில் இருந்து அந்தக் கருத்து வேறு ஒரு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்தால் ஹஸன் தர செய்தி ஸஹீஹ் லிஃகைரிஹீ என்ற தரத்தை அடையும் என்று குறிப்பிடுவர்.

3 . இவ்வாறே ஒரு செய்தி ஹஸன் லிதாதிஹீ என்ற தரத்தில் இருந்து அந்தக் கருத்து ஹஸன் லிதாதிஹீ என்ற தரத்தில் இல்லாத; மிகவும் பலவீனமானவர்கள் இல்லாத வேறு அதிகமான அறிவிப்பாளர்தொடர்களில் வந்தாலும் ஹஸன் தர செய்தி ஸஹீஹ் லிஃகைரிஹீ என்ற தரத்தை அடையும் என்று குறிப்பிடுவர்.

ஐந்தாம் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள்:

5 . நம்பகமானவர் என்றாலும் சில ஹதீஸ்களில், அல்லது சில குறிப்பிட்ட காலத்தில் ஹதீஸ்களில் தவறிழைத்தவர்கள் என்றக் கருத்தைத் தரும் வார்த்தைகள்;

நம்பகமானவர் அல்லது நினைவாற்றல் சரியானவர் என்ற கருத்தைத் தராத சாதாரண வார்த்தைகள்:

1 . محله الصدق – மஹல்லுஹுஸ் ஸித்க் – நம்பகமானவராக இருக்கலாம்.

2 . صدوق يهم – ஸதூக் யஹிமு – நம்பகமானவர்; சில இடத்தில் தவறு செய்தவர்.

3 . صدوق له أوهام – ஸதூக் லஹூ அவ்ஹாம் – நம்பகமானவர்; சில இடத்தில் தவறு செய்துள்ளார்.

4 . صدوق سيء الحفظ – ஸதூக் ஸய்யிஉல் ஹிஃப்ள் – நம்பகமானவர்; நினைவாற்றல் சரியில்லாதவர்.

5 . فلان شيخ – (ஃபுலான்) ஷைக் – பெரியவர். (முதியவர்; வயோதிகர்)

ஆறாம் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள்:

6 . (நினைவாற்றலில்) சிறிது குறையுள்ளவர்கள் என்று குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தைகள்:

1 . فلان صالح الحديث – (ஃபுலான்) ஸாலிஹுல் ஹதீஸ் – தகுதியானவர்.

2 . مقارب الحديث – முகாரிபுல் ஹதீஸ் – சுமாரானவர்.

3 . يكتب حديثه – யுக்தபு ஹதீஸுஹூ – இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம்.

4 . يعتبر به – யுஃதபரு பிஹீ – இவரின் செய்திகளை மற்றவர்களின் செய்திகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

5 . صويلح – ஸுவைலிஹ் – சிறிது சுமாரானவர்.

மேற்கண்ட 5, 6 ம் தரத்தில் உள்ளவர்கள் தனித்து அறிவிக்கும் செய்திகள் ஏற்கப்படாது என்றும், மற்றவர்கள் அறிவிக்கும்போது ஏற்கலாம் என்றும் சில அறிஞர்கள் கூறுவர். (அதாவது ஷாஹித், முதாபஅத் இருக்கும்போது இவர்களின் செய்தி சரியாகிவிடும் என்று கூறுவர்)

இந்த இரு தரத்தில் உள்ளவர்களின் செய்திகளை ஆதாரமாக ஏற்பதில் தான் அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடு ஏற்படுகிறது.

  • இந்த வகையினரில் சிலரின் தவறுகள் குறிப்பிட்ட செய்திகளில் தான் என்று அறியப்படும்போது மற்ற செய்திகள் குறைந்த பட்சம் ஹஸன் லிதாதிஹீ தரத்தை அடையும் என்று சிலர் கூறுவர்.
  • சிலரின் செய்திகள் பல வழிகளில் வரும்போது அவற்றை ஹஸன் லிஃகைரிஹீ என்றும் சிலர் குறிப்பிடுவர்.

ஏழாம் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள்:

7 . (நம்பகத்தன்மையிலும், நினைவாற்றலிலும்) சிறிது பலவீனமானவர்கள் என்று குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தைகள்:

1 . لين الحديث – லீனுல், லைய்யினுல் ஹதீஸ் – சிறிது பலவீனமானவர்.

2 . فيه لين – ஃபீஹி லீன் – இவரில் சிறிது பலவீனம் உள்ளது

3 . فيه مقال – பீஹி மகால் – இவரைப் பற்றி விமர்சனம் உள்ளது.

4 . فيه ضعف – பீஹி ளஅஃப் (ளுஅஃப்) – இவரில் சிறிது பலவீனம் உள்ளது.

5 . ليس بذاك – லைஸ பிதாக – அந்தளவிற்கு பலமானவர் அல்ல.

6 . ليس بحجة – லைஸ பிஹுஜ்ஜஹ் – ஆதாரத்திற்கேற்றவர் அல்ல.

7 . طعنوا فيه – தஅனூ ஃபீஹி – (அறிஞர்கள்) இவரை விமர்சித்துள்ளனர்.

எட்டாம் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள்:

8 . இவர்கள் (நம்பகத்தன்மையிலும், நினைவாற்றலிலும்) பலவீனமானவர்கள்; இவர்களை ஆதாரமாக ஏற்கக் கூடாது என்ற கருத்தை குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தைகள்:

1 . ضعيف – ளயீஃப்பலவீனமானவர்.

2 . واه – வாஹின், வாஹீ – பலவீனமானவர்.

3 . منكر الحديث – முன்கருல் ஹதீஸ் – அதிகமான செய்திகளை மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளவர்…

4 . له مناكير – லஹூ மனாகீர் – சில செய்திகளை மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளவர்.

5 . مضطرب الحديث – முழ்தரிபுல் ஹதீஸ் – ஹதீஸை குளறுபடியாக அறிவித்தவர்.

6 . لا يحتج به – லா யுஹ்தஜ்ஜு பிஹீ – இவரை ஆதாரமாக ஏற்கக் கூடாது.

மேற்கண்ட 7, 8 ம் தரத்தில் உள்ளவர்கள் அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை; இவைகளை ஆய்வு செய்வதற்காக எழுதிக் கொள்ளலாம். வேறு சரியான அறிவிப்பாளர்தொடர் வந்தால் இவர்களின் செய்திகளை பலவீனமான அறிவிப்பாளர்தொடர் என்றோ அல்லது ஸஹுஹுன் லிகைரிஹீ என்றோ குறிப்பிடலாம்.

  • இந்தவகையினரிலும் சிலரின் தவறுகள் குறிப்பிட்ட செய்திகளில் தான் என்று அறியப்படும்போது மற்ற செய்திகள் குறைந்த பட்சம் ஹஸன் லிதாதிஹீ என்ற தரத்தை அடையும்.
  • சிலரின் செய்திகள் பல வழிகளில் வரும்போது அவற்றை ஹஸன் லிஃகைரிஹீ என்றும் சிலர் குறிப்பிடுவர்.

என்றாலும் 1 . فيه مقال – பீஹி மகால் என்பதை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறினால் அது கடுமையான விமர்சனமாகும். ஏனெனில் இதை சிலர் விசயத்தில் متهم بالكذب – முத்தஹம் பில்கதிப் – பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்பதற்கு தான் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
கூறுவார். வேறு சிலர் இந்தக் கருத்தில் கூறாமல் இவரைப் பற்றி விமர்சனம் உள்ளது என்பதற்கு கூறுவார்கள் என்பதால் அது கடுமையான விமர்சனம் ஆகாது.

இவ்வாறே 2 . லைஸ பிஹுஜ்ஜஹ், 3 . முன்கருல் ஹதீஸ்…, 4 . முழ்தரிபுல் ஹதீஸ், 5 . லா யுஹ்தஜ்ஜு பிஹீ போன்ற விமர்சன வார்த்தைகள் மிக பலவீனமானவர் என்றக் கருத்தைத் தரும்.

இவர்கள் அதிகம் தவறிழைப்பவர்கள் என்பதாலே இவ்வாறு விமர்சிக்கப்பட்டிருப்பர். இவர்களின் செய்திகள் பல வழிகளில் வந்தாலும் இவற்றை ஹஸன் லிஃகைரிஹீ என்று கூறுவது கூட தவறாகும்.

ஒன்பதாம் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள்:

9 . இவர்களின் செய்திகளை எழுதக் கூடாது என்றோ அல்லது இவர்களிடமிருந்து ஹதீஸை அறிவிக்கக் கூடாது என்றோ குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தைகள்:

1 . لا يكتب حديثه – லா யுக்தபு ஹதீஸுஹூ – இவரின் செய்திகளை எழுதக் கூடாது.

2 . لا تحل الرواية عنه – லா தஹில்லுர் ரிவாயது அன்ஹு – இவரிடமிருந்து அறிவிக்கக் கூடாது.

3 . ضعيف جداً – ளயீஃப் ஜித்தன் – மிகவும் பலவீனமானவர்.

4 . طرحوا حديثه – தரஹூ ஹதீஸஹூ – இவரின் செய்திகளை அறிஞர்கள் மறுத்துவிட்டனர்.

5 . ليس بشيء – லைஸ பிஷைஃ – இவர் ஒரு பொருட்டே அல்ல.

(இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் குறைந்த ஹதீஸ் உடையவர்களுக்கும் இப்படி கூறியுள்ளார். எனவே அவர்களை பற்றி மற்ற அறிஞர்கள் கூறியிருப்பதையும் பார்க்க வேண்டும்)

6 . ارم به – இர்மி பிஹீ – இவரை எறிந்து விடு (இவரின் ஹதீஸை ஏற்காதே)

பத்தாம் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள்:

10 . பொய்யர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தைகள்:

1 . متهم بالكذب – முத்தஹம் பில்கதிப் – (மக்களிடம் பொய் சொல்பவர் என்பதால்) பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர்.

2 . متهم بالوضع – முத்தஹம் பில்வழ்ஃ – (மக்களிடம் பொய் சொல்பவர் என்பதால்) பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர்

3 . يسرق الحديث – யஸ்ரிகுல் ஹதீஸ் – ஹதீஸை திருடுபவர், மற்றவர்களின் ஹதீஸ்களை தன்னுடையை ஹதீஸாக அறிவிப்பவர்; அறிவிப்பாளர்தொடரில் தில்லுமுல்லு வேலைகளை செய்பவர்.

4 . ساقط – ஸாகித் – விழுந்தவர்.

5 . هالك – ஹாலிக் – அழிந்தவர்.

6 . متروك – மத்ரூக் – புறக்கணிக்கப்பட்டவர்; கைவிடப்பட்டவர்.

7 . سكتوا عنه – ஸகதூ அன்ஹு – இவரைப் பற்றி அறிஞர்கள் பேசமாட்டார்கள். (புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இதைக் கூறினால் அவர் மிகப் பலவீனமானவர். வேறு சில அறிஞர்களின் வழக்கில் سكت عنه – ஸகத அன்ஹு என்று கூறினால் இவரைப் பற்றி அந்த அறிஞர் எதுவும் கூறவில்லை என்பதாகும்)

பதினொன்றாம் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள்:

11 . பொய்யர்கள் என்று குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தைகள்:

1 . كذاب – கத்தாப் – பொய்யர்.

2 . وضاع – வழ்ழாஃ – பொய்யர்.

3 . دجال – தஜ்ஜால் – பொய்யர்.

4 . يكذب – யக்திபு – பொய் சொல்பவர்.

5 . يضع – யழஉ – இட்டுக் கட்டுபவர்.

பனிரெண்டாம் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள்:

12 . மிகப்பெரும் பொய்யர்கள் என்று குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தைகள்:

1 . أكذب الناس – அக்தபுன் நாஸ் – மக்களிலேயே இவர் பெரிய பொய்யர்.

2 . إليه المنتهى في الكذب – இலைஹில் முன்தஹா ஃபில்கதிப்- பொய்யின் எல்லையை அடைந்தவர் (பொய் இவரிடம் முடிகிறது)

3 . إليه المنتهى في الوضع – இலைஹில் முன்தஹா ஃபில்வழ்ஃ – பொய்யின் எல்லையை அடைந்தவர். (பொய் இவரிடம் முடிகிறது)

4 . ركن الكذب – ருக்னுல் கதிப் – பொய்யின் வடிவம் (பொய்யின் தூண்)

மேற்கண்ட 9, 10, 11, 12 ம் தரத்தில் உள்ளவர்கள் அறிவிக்கும் செய்திகள் மிக பலவீனமானவை. (இவைகளை அடையாளம் காட்டுவதற்காக மட்டுமே எழுதிக் கொள்ளலாம் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுவர்)

வேறு சரியான அறிவிப்பாளர்தொடர் வந்தாலும் அவற்றின் மூலம் இவைகள் பலமானவை என்று கூறக்கூடாது. இவர்களின் செய்திகளை மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடர் என்றோ அல்லது பொய்யர்கள் வரும் அறிவிப்பாளர்தொடர்களை பொய்யான அறிவிப்பாளர்தொடர் என்றோ குறிப்பிடவேண்டும்.

இதனடிப்படையில் ஹதீஸ்களை ஐந்து வகையாக குறிப்பிடலாம்.

1 . ஸஹீஹ் – சரியானவை

2 . ஹஸன் – அழகானவை

3 . ளயீஃப்பலவீனமானவை

4 . ளயீஃப் ஜித் – மிக பலவீனமானவை

5 . மவ்ளூஃ – இட்டுக்கட்டப்பட்டவை / பொய்யானவை

(நாம் மேற்கூறிய குறை, நிறை வார்த்தைகள் உதாரணத்திற்காக கூறப்பட்டுள்ளது. இன்னும் இதுபோன்று அதிக வார்த்தைகள் உள்ளன. மேலும் சில வார்த்தைகளை அரபு அகராதியில் உள்ள பொருளைப் பார்க்காமல் அதைக் கூறும் ஹதீஸ்கலை அறிஞரின் கருத்து என்ன என்பதைத் தெரிந்தே அதைப் பற்றி முடிவு செய்யவேண்டும்)

(ஆதார நூல்: மாத்தது முஸ்தலஹ்)


இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:

1 . பார்க்க: ஹதீஸை ஆய்வு செய்யும் முறை .

2 . பார்க்க: தரத்தைக் கவனித்து 12 வகை அறிவிப்பாளர்கள் .

3 . பார்க்க: காலகட்டத்தைக் கவனித்து 12 வகை அறிவிப்பாளர்கள் .

4 . பார்க்க: கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளரின் தரம் பற்றி எவ்வாறு முடிவு செய்வது? .


5 . பார்க்க: ஸதூக் தரமுடையோர் .

6 . பார்க்க: ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்றால் என்ன?

7 . பார்க்க: அல்இஃதிபார், அல்முதாபஅஹ், அஷ்ஷாஹித் .

 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.