பாடம்:
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் (வழியாக வரும்) ஹதீஸ்கள்.
நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை யமன் (எனும்) நாட்டுக்கு அனுப்பும் போது, “ஏதேனும் வழக்கு ஏற்படும்போது நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். அதைப் பற்றி அல்லாஹ்வின் வேதத்தில் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.
அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு முடிந்தவரை ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார். (உடனே) நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களின் நெஞ்சில் அடித்து விட்டு, “அல்லாஹ்வின் தூதரை மகிழ்ச்சிப்படுத்தும் செயலின் பக்கம் அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு, நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்கள்: ஹிம்ஸ் நகரைச் சேர்ந்த முஆத் (ரலி) அவர்களின் தோழர்கள்.
தயாலிஸீ இமாம் கூறுகிறார்:
ஷுஅபா அவர்கள், ஒரு தடவை ஹாரிஸ் பின் அம்ர் —> முஆத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தியை அறிவித்தார்.
(அதாவது ஹாரிஸ் பின் அம்ர், முஆத் (ரலி) ஆகியோருக்கிடையில் முஆத் (ரலி) அவர்களின் தோழர்களைக் குறிப்பிடவில்லை)
(tayalisi-560: 560)أَحَادِيثُ مُعَاذِ بْنِ جَبَلٍ رَحِمَهُ اللَّهُ
حَدَّثَنَا يُونُسُ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي أَبُو عَوْنٍ الثَّقَفِيُّ، قَالَ: سَمِعْتُ الْحَارِثَ بْنَ عَمْرٍو، يُحَدِّثُ عَنْ أَصْحَابِ مُعَاذٍ مِنْ أَهْلِ حِمْصٍ قَالَ: وَقَالَ مَرَّةً عَنْ مُعَاذٍ:
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ قَالَ لَهُ: «كَيْفَ تَقْضِي إِنْ عَرَضَ لَكَ قَضَاءٌ؟» قَالَ: أَقْضِي بِكِتَابِ اللَّهِ قَالَ: «فَإِنْ لَمْ تَجِدْهُ فِي كِتَابِ اللَّهِ؟» قَالَ: أَقْضِي بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَإِنْ لَمْ تَجِدْهُ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ؟» قَالَ: أَجْتَهِدُ رَأْيِي لَا آلُو قَالَ: فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ لِمَا يُرْضِي رَسُولَ اللَّهِ»
Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-560.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-555.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஹாரிஸ் பின் அம்ர் அஸ்ஸகஃபீ என்பவரிடமிருந்து அபூஅவ்ன் (முஹம்மது பின் உபைதுல்லாஹ்) அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார் என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் குறிப்பிட்டுவிட்டு எனவே இவர் அறியப்படாதவர்; இவர் இந்தச் செய்தியை மட்டுமே அறிவித்துள்ளார்; எனவே இந்தச் செய்தி சரியானதல்ல என்று கூறியுள்ளார். இதையே இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்களும் கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2/465, தஹ்தீபுல் கமால்-5/266, தஹ்தீபுத் தஹ்தீப்-1/334)
- மேலும் இவர் முஆத் (ரலி) அவர்களின் தோழர்களிடமிருந்து கேட்டதாக அறிவிக்கிறார். அவர்கள் யார் என்பது பற்றிய விவரமும் இல்லை.
எனவே இது பலவீனமானதாகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-1327 .
சமீப விமர்சனங்கள்