தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1327

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நீதிபதி எவ்வாறு தீர்ப்பளிக்க வேண்டும்? என்பது குறித்து வந்துள்ளவை.

நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை யமன் (எனும்) நாட்டுக்கு அனுப்பும் போது, “(பிரச்சனை ஏற்படும்போது) நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். (அந்தப் பிரச்சனைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தில் இல்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் இல்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார். (உடனே) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: முஆத் (ரலி) அவர்களின் தோழர்கள்.

(திர்மிதி: 1327)

بَابُ مَا جَاءَ فِي القَاضِي كَيْفَ يَقْضِي

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي عَوْنٍ الثَّقَفِيِّ، عَنْ الحَارِثِ بْنِ عَمْرٍو، عَنْ رِجَالٍ مِنْ أَصْحَابِ مُعَاذٍ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا إِلَى اليَمَنِ، فَقَالَ: «كَيْفَ تَقْضِي؟»، فَقَالَ: أَقْضِي بِمَا فِي كِتَابِ اللَّهِ، قَالَ: «فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ؟»، قَالَ: فَبِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَإِنْ لَمْ يَكُنْ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟»، قَالَ: أَجْتَهِدُ رَأْيِي، قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1327.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1245.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10962-ஹாரிஸ் பின் அம்ர் அஸ்ஸகஃபீ என்பவரிடமிருந்து அபூஅவ்ன் (முஹம்மது பின் உபைதுல்லாஹ்) அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார் என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் குறிப்பிட்டுவிட்டு எனவே இவர் அறியப்படாதவர்; இவர் இந்தச் செய்தியை மட்டுமே அறிவித்துள்ளார்; எனவே இந்தச் செய்தி சரியானதல்ல என்று கூறியுள்ளார். இதையே இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்களும் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2/465, தஹ்தீபுல் கமால்-5/266, தஹ்தீபுத் தஹ்தீப்-1/334)

  • மேலும் இவர் முஆத் (ரலி) அவர்களின் தோழர்களிடமிருந்து கேட்டதாக அறிவிக்கிறார். அவர்கள் யார் என்பது பற்றிய விவரமும் இல்லை.

இந்தச் செய்தியின் கருத்து சரியானதாக இருந்தாலும் அறிவிப்பாளர்தொடர் சரியானதல்ல என்பதால் பல அறிஞர்கள் இந்தச் செய்தியை பலவீனமானது என்றே கூறியுள்ளனர்.

  • இதன் அறிவிப்பாளர்தொடர்களைப் பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் விரிவாக கூறியுள்ளார்.

அதைப் பற்றிய விவரம்:

1 . இந்தச் செய்தியை ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஸீத் பின் ஹாரூன், யஹ்யா அல்கத்தான், வகீஃ, அஃப்பான், ஆஸிம் பின் அலீ, ஃகுன்தர் ஆகியோர் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
—> அபூஅவ்ன் —> ஹாரிஸ் பின் அம்ர் —> முஆத் (ரலி) அவர்களின் தோழர்கள் —> முஆத் (ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

2 . ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அபுல்வலீத், ரஸாஸீ, அலீ பின் ஸைத், அம்ர் பின் மர்ஸூக் ஆகியோர் முர்ஸலாக (அதாவது முஆத் (ரலி) அவர்களுக்கும், ஹாரிஸ் பின் அம்ர் என்பவருக்கும் இடையில் பெயர் குறிப்பிடப்படாதவர்களை) அறிவித்துள்ளனர்.

3 . ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களிடமிருந்து அறிவிக்கும் தயாலிஸீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 204
வயது: 71
அவர்கள், ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள், ஒரு தடவை ஹாரிஸ் பின் அம்ர் —> முஆத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் கூறியதாகவும் அறிவித்துள்ளார்.

4 . இந்தச் செய்தி மிஸ்அர் —> அபூஅவ்ன் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இந்தச் செய்தியை அபூஅவ்ன் அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் முர்ஸலான அறிவிப்பாளர்தொடரே பலமானதாக இருப்பதால் இந்த செய்தியை முர்ஸல் என்று முடிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1001, 6/88)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-560 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-22988 , 22989 , 29100 , அஹ்மத்-2200722061 , 22100 , தாரிமீ-170 , அபூதாவூத்-3592 , 3593 , திர்மிதீ-13271328 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-3582 , 3583 , அல்முஃஜமுல் கபீர்-362 , குப்ரா-பைஹகீ-20339 , 20340 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.