தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17030

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். அதில் (சில தொழுகைகளை) தொழுங்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 17030)

حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، قَالَ: أَخْبَرَنَا وَيَعْلَى قَالَ: حَدَّثَنَا وَيَزِيدُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ قُبُورًا، صَلُّوا فِيهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17030.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16695.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28478-அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள், ஸைத் பின் காலித் (ரலி) போன்ற சில நபித்தோழர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள் கூறியுள்ளார். எனவே இது முன்கதிஃ என்பதால் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/103, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/348)

2 . இந்தக் கருத்தில் ஸைத் பின் காலித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-170301704421677 , முஸ்னத் பஸ்ஸார்-, …

சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-432 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.