தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-26258

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு, ஒரு கடிதத்தை நபி (ஸல்) அவர்களிடம் நீட்டினார். அவரின் கையைப் பிடித்த நபி (ஸல்) அவர்கள், இது ஆணின் கரமா? அல்லது பெண்ணின் கரமா? என்று எனக்குத் தெரியவில்லையே! என்று கூறினார்கள். அதற்கு அந்தப்பெண், “பெண்ணின் கரம்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் நகங்களை (மருதாணி போன்றதைக் கொண்டு) மாற்றியிருக்க வேண்டுமே! என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 26258)

حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا مُطِيعُ بْنُ مَيْمُونٍ الْعَنْبَرِيُّ، يُكْنَى أبَا سَعِيدٍ، قَالَ: حَدَّثَتْنِي صَفِيَّةُ بِنْتُ عِصْمَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ:

مَدَّتْ امْرَأَةٌ مِنْ وَرَاءِ السِّتْرِ بِيَدِهَا كِتَابًا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، وَقَالَ: «مَا أَدْرِي أَيَدُ رَجُلٍ أَوْ يَدُ امْرَأَةٍ؟» فَقَالَتْ: بَلْ امْرَأَةٌ، فَقَالَ: «لَوْ كُنْتِ امْرَأَةً غَيَّرْتِ أَظْفَارَكِ بِالْحِنَّاءِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-26258.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-25667.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஸஃபிய்யா பின்த் இஸ்மா யாரென அறியப்படாதவர்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1360)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-4166 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.