8137. மதீனா நகரத்தில் இருந்த ஒரு பெண்மனி, பெண்களுக்கு (கத்னா எனும்) விருத்தசேதனம் செய்பவராக இருந்தார். அவரின் பெயர் உம்மு அதிய்யா என்று கூறப்படும்.
அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “மேலோட்டமாக நறுக்குவாயாக!; ஒட்ட நறுக்கி விடாதே! இதுவே அதன் தோற்ற அமைப்புக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்)
حَدَّثَنَا الْمِقْدَامُ بْنُ دَاوُدَ الْمِصْرِيُّ، ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ الرَّقِّيُّ، ثنا عُبَيْدُ اللهِ بْنُ عَمْرٍو، عَنْ رَجُلٍ، مِنْ أَهْلِ الْكُوفَةِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ قَالَ:
كَانَتْ بِالْمَدِينَةِ امْرَأَةٌ تَخْفِضُ النِّسَاءَ، يُقَالُ لَهَا أُمُّ عَطِيَّةَ، فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْفِضِي، وَلَا تَنْهَكِي، فَإِنَّهُ أَنْضَرُ لِلْوَجْهِ، وَأَحْظَى عِنْدَ الزَّوْجِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-8137.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-8058.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45215-மிக்தாம் பின் தாவூத் என்பவர் பற்றி சிலர் சுமாரானவர் என்றும்; நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் இவர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்: லிஸானுல் மீஸான்-8/144)
- மேலும் இதில் அப்துல்மலிக் என்பவரிடமிருந்து அறிவிக்கும் மனிதர் பற்றிய விவரம் இல்லை. மேலும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இதை அறிவிக்கும் ளஹ்ஹாக் பின் கைஸ் என்பவர் நபித்தோழரான ளஹ்ஹாக் பின் கைஸ் அல்ஃபிஹ்ரீ என்பவர் அல்ல என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை தாபிஈ என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அல்இஸாபா-3/504, அவ்னுல் மஃ-பூத்-4/540)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: ஹாகிம்-6236 .
சமீப விமர்சனங்கள்