தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-30103

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு மஸ்ஊத் (ரலி), அலீ (ரலி) ஆகியோரின் மாணவர்களை நான் சந்தித்துள்ளேன். அவர்களில் யாருக்கும் (குர்ஆன் விரிவுரை பற்றி) கல்வி ஞானம் இல்லை. எனவே அவர்களிடமிருந்து குர்ஆனின் விரிவுரையை (கேட்பதை) நான் வெறுக்கிறேன்.

அல்லாஹ்வின் வேதத்தில் (உள்ள ஒன்றுக்கு), நான் அறியாத ஒன்றை (விளக்கமாக) கூறினால் எந்த வானம் எனக்கு நிழல் தரும்? எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள் (என்பது தான் இதற்கான காரணம்).

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 30103)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الْحَسَنِ بْنِ عَمْرٍو، عَنِ الشَّعْبِيِّ قَالَ:

أَدْرَكْتُ أَصْحَابَ عَبْدِ اللَّهِ، وَأَصْحَابَ عَلِيٍّ وَلَيْسَ هُمْ لِشَيْءٍ مِنَ الْعِلْمِ أَكْرَهُ مِنْهُمْ لِتَفْسِيرِ الْقُرْآنِ، قَالَ: وَكَانَ أَبُو بَكْرٍ يَقُولُ: «أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، وَأَيُّ أَرْضٍ تُقِلُّنِي إِذَا قُلْتُ فِي كِتَابِ اللَّهِ مَا لَا أَعْلَمُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-30103.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-29514.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஆமிர் அஷ்ஷஅபீ அவர்கள் பிறந்தது ஹிஜ்ரீ 19, 20 , 21 , 31 என்று பலவாறு கூறப்பட்டுள்ளது. இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 456
    வயது: 72
    அவர்கள், உமர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட பிறகே இவர் பிறந்தார் என்று கூறியுள்ளார். இதன்படி இவர் ஹிஜ்ரீ 23 இல் பிறந்தார் என்றும் கூறப்படுகிறது. இவர் ஹிஜ்ரீ 19 இல் பிறந்தார் என்று கருதினாலும் அபூபக்ர் (ரலி) ஹிஜ்ரீ 13 இல் இறந்துவிட்டார். எனவே இதை இவர், அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வாய்ப்பில்லை.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/264)

எனவே இது முன்கதிஃ என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: ஷுஅபுல் ஈமான்-2082 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.