பாடம்:
துன்பம் நேரும்போது நன்மையை எதிர்பார்(த்து பொறுமை கா)ப்பதன் சிறப்பு.
ஈஸா பின் ஸினான் அவர்கள் கூறியதாவது:
நான் (என் புதல்வர்) ஸினான் என்பாரை அடக்கம் செய்தேன். அப்போது அபூதல்ஹா அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் அந்தக் குழியின் ஓரத்தில் அமர்ந்திருந்தார். நான் (அடக்கி முடித்துவிட்டு அங்கிருந்து) புறப்பட முற்பட்டபோது, அபூதல்ஹா (ரஹ்) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு, “அபூஸினானே! நான் உமக்கு ஒரு நற்செய்தியைச் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “சரி (கூறுங்கள்)” என்றேன்.
அப்போது அபூதல்ஹா அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள், “அடியார் ஒருவரின் பிள்ளை இறந்துவிட்டால்அல்லாஹ் தன் வானவர்களிடம், ‘என் அடியாரின் பிள்ளையின் உயிரைக் கைப்பற்றி விட்டீர்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘ஆம்’ என்பார்கள். அப்போது அல்லாஹ், “அவரது இதயக்கனியையா நீங்கள் கைப்பற்றினீர்கள்?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘ஆம்’ என்பர்.
(அப்போது) என் அடியார் என்ன சொன்னார்?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு வானவர்கள், “அவர் உன்னைப் புகழ்ந்து, இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே நாங்கள் திரும்பிச் செல்லக்கூடியவர்கள்) என்று கூறினார்” என்பார்கள்.
அப்போது அல்லாஹ், என் அடியாருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புங்கள். அதற்கு ‘பைத்துல் ஹம்த்’ (புகழ் மாளிகை) எனப் பெயரிடுங்கள் என்று கூறுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் வழியாக ளஹ்ஹாக் பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள் (அதுவே அந்த நற்செய்தியாகும்) என்றார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். அபூஸினான் என்பவரின் (இயற்)பெயர் ஈஸா பின் ஸினான் என்பதாகும்.
(திர்மிதி: 1021)بَابُ فَضْلِ المُصِيبَةِ إِذَا احْتَسَبَ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي سِنَانٍ، قَالَ:
دَفَنْتُ ابْنِي سِنَانًا، وَأَبُو طَلْحَةَ الخَوْلَانِيُّ جَالِسٌ عَلَى شَفِيرِ القَبْرِ، فَلَمَّا أَرَدْتُ الخُرُوجَ أَخَذَ بِيَدِي، فَقَالَ: أَلَا أُبَشِّرُكَ يَا أَبَا سِنَانٍ؟ قُلْتُ: بَلَى، فَقَالَ: حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا مَاتَ وَلَدُ العَبْدِ قَالَ اللَّهُ لِمَلَائِكَتِهِ: قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي، فَيَقُولُونَ: نَعَمْ، فَيَقُولُ: قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤَادِهِ، فَيَقُولُونَ: نَعَمْ، فَيَقُولُ: مَاذَا قَالَ عَبْدِي؟ فَيَقُولُونَ: حَمِدَكَ وَاسْتَرْجَعَ، فَيَقُولُ اللَّهُ: ابْنُوا لِعَبْدِي بَيْتًا فِي الجَنَّةِ، وَسَمُّوهُ بَيْتَ الحَمْدِ
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، وَاسْمُ أَبِي سِنَانٍ عِيسَى بْنِ سِنَانٍ
Tirmidhi-Tamil-942.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1021.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-940.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32949-அபூஸினான்-ஈஸா பின் ஸினான் என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் பலமானவர் என்று கூறியதாக யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அறிவித்துள்ளார். - இஸ்ஹாக் பின் மன்ஸூர், அப்பாஸ் அத்தூரீ போன்ற மற்றவர்கள், இவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர். - அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அவர்கள், இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார். - யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அபூஸுர்ஆ, தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் இவர் சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-22/606, தஹ்தீபுத் தஹ்தீப்-3/358, தக்ரீபுத் தஹ்தீப்-1/767)
மேற்கண்ட விமர்சனத்தின்படி இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளை சிலர் பலவீனமானது என்றும், இவர் போன்று மற்றவர்கள் அறிவித்தால் அதை ஹஸன் தரம் என்றும் கூறியுள்ளனர். இந்தச் செய்தியை இவர் தனித்து அறிவித்துள்ளார்.
- மேலும் இதில் வரும் ராவீ-17777-அபூதல்ஹா அல்கவ்லானீ என்பவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டுமே பலமானவரின் பட்டியலில் கூறியுள்ளார். இவரிடமிருந்து அபூஸினான் மட்டுமே அறிவித்துள்ளார். இவர் பெயர் பற்றி இருவகையான கருத்துக்கள் உள்ளன… - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார். - இவரைப் பற்றி முழுத்தகவல் அறியப்படவில்லை என்ற கருத்தை தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் கூறியுள்ளார். - இவரை சிலர் நபித்தோழர் என்று கூறியிருந்தாலும் இது தவறாகும். இவர் தாபிஈ என்பதே சரி.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-33/441, அல்காஷிஃப்-5/66, தஹ்தீபுத் தஹ்தீப்-4/542, தக்ரீபுத் தஹ்தீப்-1/1166, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/615)
1 . இந்தக் கருத்தில் அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-510 , அஹ்மத்-19725 , 19726 , அப்து பின் ஹுமைத்-551 , திர்மிதீ-1021 , இப்னு ஹிப்பான்-2948 , குப்ரா பைஹகீ-7146 ,
இதனுடன் தொடர்புடைய சரியான செய்திகள்:
பார்க்க: புகாரி-1249 ,
சமீப விமர்சனங்கள்