தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-6780

A- A+


ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

ஒருவர் பிறந்த குழந்தையின் வலதுக் காதில் பாங்கும், இடதுக் காதில் இகாமத்தும் கூறினால் அந்தக் குழந்தைக்கு உம்முஸ் ஸிப்யான் என்ற ஜின்னால் தீங்கிழைக்கமுடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுஸைன் பின் அலீ (ரலி)

(abi-yala-6780: 6780)

حَدَّثَنَا جُبَارَةُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ الْعَلَاءِ، عَنْ مَرْوَانِ بْنِ سَالِمٍ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ حُسَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ وُلِدَ لَهُ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى لَمْ تَضُرَّهُ أُمُّ الصِّبْيَانِ»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-6780.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூயஃலா (நூலாசிரியர்)

2 . ஜுபாரா பின் முஃகல்லிஸ்

3 . யஹ்யா பின் அலா

4 . மர்வான் பின் ஸாலிம்

5 . தல்ஹா பின் உபைதுல்லாஹ்

6 . ஹுஸைன் பின் அலீ (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10027-ஜுபாரா பின் முஃகல்லிஸ் என்பவர் பற்றி இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும்; கைவிடப்பட்டவர் என்றும் பெரும்பாலான ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/288)

  • இவ்வாறே ராவீ-48106-யஹ்யா பின் அலா என்பவர் பற்றி இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும்; கைவிடப்பட்டவர் என்றும் பெரும்பாலான ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/380)

  • இவ்வாறே ராவீ-44102-மர்வான் பின் ஸாலிம் என்பவர் பற்றி இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும்; கைவிடப்பட்டவர் என்றும் பெரும்பாலான ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/50)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


3 , 4 . இந்தக் கருத்தில் ஹஸன் பின் அலீ (ரலி), ஹுஸைன் பின் அலீ (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

  • ஹுஸைன் பின் அலீ (ரலி) வழியாக:

பார்க்க: ஹதீஸு அபூஅப்தில்லாஹ்(ஹுஸைன் பின் அலீ-ரலி)- , முஸ்னத் அபீ யஃலா-6780 , அமலுல் யவ்மி வல்லைலா-, ஷுஅபுல் ஈமான்-, தாரீகு திமிஷ்க்-, அல்இத்ஹாஃப்-,

  • ஹஸன் பின் அலீ (ரலி) வழியாக:

பார்க்க: அல்மதாலிபுல் ஆலியா-2307.

المطالب العالية محققا (10/ 497)
2307 – وَقَالَ أَبُو يَعْلَى: حَدَّثَنَا جُبَارَةُ (1) ثنا يَحْيَى بْنُ الْعَلَاءِ، عَنْ مَرْوَانَ بْنِ سَالِمٍ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنِ الْحُسَيْنِ [وَقَالَ مَرَّةً عَنِ الْحَسَنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا] (2)، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم-: “مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى لَمْ تَضُرَّهُ أم الصبيان (3) “.


  • இதன் அறிவிப்பாளர்தொடரும் முஸ்னத் அபூயஃலா-6780 ல் வந்துள்ள அறிவிப்பாளர்தொடர் என்பதால் இது பொய்யான செய்தியாகும்.
  • இந்தச் செய்தி மேற்கண்ட நூல்கள் அனைத்திலும் மர்வான் பின் ஸாலிம் போன்ற பொய்யர்கள் வழியாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதால் இவை அனைத்தும் பொய்யான செய்திகளாகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-1514 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.