தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-715

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

வணக்கங்களில் சிறந்தது எதுவென நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “ஒருவர் தனக்காக (அல்லாஹ்விடம்) செய்யும் பிரார்த்தனையாகும்” என அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(al-adabul-mufrad-715: 715)

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنِ مُبَارَكِ بْنِ حَسَّانَ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ:

سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْعِبَادَةِ أَفْضَلُ؟ قَالَ: «دُعَاءُ الْمَرْءِ لِنَفْسِهِ»


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-715.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-714.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . உபைதுல்லாஹ் பின் முஸா

3 . முபாரக் பின் ஹஸ்ஸான்

4 . அதாஉ பின் அபூரபாஹ்

5 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35008-முபாரக் பின் ஹஸ்ஸான்-அபூயூனுஸ் பஸரீ என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    இப்னு அபூகைஸமா ஆகியோர் இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளனர்.
  • நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்கள், இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் பலமானவர்களுக்கு மாற்றமாக சில செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள், இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், (முன்சென்ற அறிஞர்களின் விமர்சனத்தின்படி) இவர் சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/340, அல்காமில்-8/29, அல்காஷிஃப்-4/237, தாரீகுல் இஸ்லாம்-4/190, தஹ்தீபுத் தஹ்தீப்-4/17, தக்ரீபுத் தஹ்தீப்-1/918 )

இந்தச் செய்தியை இவர் தனித்து அறிவிக்கிறார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


மேலும், ராவீ-28478-அதாஉ பின் அபூரபாஹ் அவர்கள், பலமானவர்தான் என்றாலும் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் “ஸமிஃது-நேரடியாக கேட்டேன்” என்பது போன்ற வார்த்தைகளை கூறினால் தான் ஏற்கவேண்டும் என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் கூறியதாக அஸ்ரம் அறிவித்துள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/101)

இதில் அவ்வாறு கூறவில்லை என்பதாலும் இது பலவீனமடைகிறது.


1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-715 , ஹாகிம்-1992 , அக்பாரு அஸ்பஹான்-675 , …..

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.