தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-33

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 25

பின்தலையிலிருந்து ‘மஸ்ஹு’ செய்ய ஆரம்பிப்பது தொடர்பாக வந்துள்ளவை.

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (உளூ செய்யும்போது), இரு முறை தமது தலையை (ஈரக் கையால்) தடவி (மஸ்ஹுச் செய்யலா)னார்கள். (தம் கைகளை) பின் தலையில் வைத்து அப்படியே அவற்றை முன்தலைக்குக் கொண்டுசென்றார்கள். பிறகு (ஈரக் கையால்) தம்மிரு காதுகளையும் அவற்றின் உட்புறம் வெளிப்புறம் ஆகிய இரண்டிலும் தடவி (மஸ்ஹுச் செய்யலா)னார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன்’ தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இருப்பினும், இந்த ஹதீஸைவிட அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் முந்திய ஹதீஸ்தான் ஆதாரபூர்வமானதும், தரமான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டதும் ஆகும். கூஃபாவாசிகளில் சிலர் இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட்டுள்ளனர். இவர்களில் வகீஃ பின் அல்ஜர்ராஹ் அவர்களும் ஒருவராவார்.

(திர்மிதி: 33)

بَابُ مَا جَاءَ أَنَّهُ يَبْدَأُ بِمُؤَخَّرِ الرَّأْسِ

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ ابْنِ عَفْرَاءَ،

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ بِرَأْسِهِ مَرَّتَيْنِ، بَدَأَ بِمُؤَخَّرِ رَأْسِهِ، ثُمَّ بِمُقَدَّمِهِ، وَبِأُذُنَيْهِ كِلْتَيْهِمَا، ظُهُورِهِمَا وَبُطُونِهِمَا»

هَذَا حَدِيثٌ حَسَنٌ، وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ أَصَحُّ مِنْ هَذَا وَأَجْوَدُ إِسْنَادًا. وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْكُوفَةِ إِلَى هَذَا الْحَدِيثِ مِنْهُمْ وَكِيعُ بْنُ الْجَرَّاحِ


Tirmidhi-Tamil-31.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-33.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




மேலும் பார்க்க: அபூதாவூத்-126 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.