அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கற்றாழை தேனைக் கெடுத்துவிடுவது போன்று கோபம் ஈமானைக் கெடுத்துவிடும்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி)
(இந்தச் செய்தியை அறிவிக்கும் பைஹகீ அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான) அபூஹாஸிம்-அம்ர் பின் அஹ்மத் அவர்கள் கூறியதாவது:
இந்தச் செய்தியை முகய்யிஸ் பின் தமீம் என்பவரிடமிருந்து ஹிஷாம் பின் அம்மார் அவர்கள் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.
(shuabul-iman-7941: 7941)حَدَّثَنَا أَبُو سَعْدٍ عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ الْوَاعِظُ، وَأَبُو حَازِمٍ الْحَافِظُ، قَالَا: نا أَبُو عَمْرٍو إِسْمَاعِيلُ بْنُ نُجَيْدٍ السُّلَمِيُّ، نا أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ الْخَلِيلِ، نا هِشَامُ بْنُ عَمَّارٍ الدِّمَشْقِيُّ، نا مُخَيِّسُ بْنُ تَمِيمٍ، عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِنَّ الْغَضَبَ لَيُفْسِدُ الْإِيمَانَ كَمَا يُفْسِدُ الصَّبْرُ الْعَسَلَ
قَالَ أَبُو حَازِمٍ: تَفَرَّدَ بِهِ هِشَامُ بْنُ عَمَّارٍ، عَنْ مُخَيِّسِ بْنِ تَمِيمٍ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-7941.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-43995-முகய்யிஸ் பின் தமீம் அல்அஷ்ஜஈ என்பவரிடமிருந்து நான்கு பேர் அறிவித்திருந்தாலும் மூவர் அறியப்படாதவர்கள் என்பதுடன் வேறுசிலராலும் அந்த அறிவிப்பாளர்தொடர்கள் பலவீனமானது. எனவே இவரிடமிருந்து ஹிஷாம் பின் அம்மார் மட்டுமே அறிவித்துள்ளார் என்றே முடிவு செய்யவேண்டும்.
- இதனால் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவரை அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். - மேலும் இவர் மற்றவர்கள் அறிவிக்காத சில செய்திகளை அறிவித்துள்ளார் என்று உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/442, லிஸானுல் மீஸான்-8/20)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் முஆவியா பின் ஹைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஃபவாஇத் இப்னு அபுல்அகப்-, அல்முஃஜமுல் கபீர்-, ஃபவாஇத் தம்மாம்-, ஷுஅபுல் ஈமான்-7941 , தாரீகு திமிஷ்க்-,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-6116 ,
சமீப விமர்சனங்கள்