643. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் மகளார்) ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு குஞ்சம் வைத்த ஒரு கம்பளிப் போர்வை, தோலாலான ஒரு தண்ணீர்க் குடுவை, இத்கிர் (எனும் நறுமணப்புல்) நிரப்பப்பட்ட தோல் தலையணை ஆகியவற்றைத் திருமணச் சீர்ப்பொருள்களாகக் கொடுத்தனுப்பினார்கள்.
حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، أَخْبَرَنَا زَائِدَةُ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ:
«جَهَّزَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ فِي خَمِيلٍ، وَقِرْبَةٍ، وَوِسَادَةِ أَدَمٍ حَشْوُهَا لِيفُ الْإِذْخِرِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-643.
Musnad-Ahmad-Alamiah-608.
Musnad-Ahmad-JawamiulKalim-628.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . அபூஉஸாமா (ஹம்மாத் பின் உஸாமா)
3 . ஸாயிதா பின் குதாமா
4 . அதாஉ பின் ஸாயிப்
5 . ஸாயிப் பின் மாலிக்
6 . அலீ (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28479-அதாஉ பின் ஸாயிப் அவர்கள் கடைசி காலத்தில் மூளைக்குழம்பியவர் ஆவார். ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஹைர், ஸாயிதா பின் குதாமா, ஹம்மாத் பின் ஸைத், அய்யூப் ஆகியோர் இவர் மூளைக்குழம்புவதற்கு முன் இவரிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டுள்ளனர் என்பதால் இவர்கள் அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்று சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். - இவ்வாறே ஹம்மாத் பின் ஸலமாவும் இவரிடம் ஆரம்பத்தில் ஹதீஸைக் கேட்டுள்ளார். இவர் விசயத்தில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் நமது நிலைப்பாடு இவரும் அதாஃ அவர்களிடம் ஆரம்பத்தில் ஹதீஸைக் கேட்டவர் ஆவார். (பார்க்க: ஹம்மாத் பின் ஸலமா)
- ஸாயிதா பின் குதாமா இவரிடம் ஆரம்பத்தில் ஹதீஸைக் கேட்டவர் என்று தப்ரானி அவர்கள் கூறியிருப்பதை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/103)
எனவே இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் அலீ பின் அபூதாலிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸாயிதா —> அதாஉ பின் ஸாயிப் —> ஸாயிப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> அலீ (ரலி)
பார்க்க: அஹ்மத்-643 , 715 , 819 , 853 , நஸாயீ-3384 , …
- முஹம்மத் பின் ஃபுளைல் —> அதாஉ பின் ஸாயிப் —> ஸாயிப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> அலீ (ரலி)
பார்க்க: இப்னு மாஜா-4152 ,
ஜஸாகல்லாஹு ஹைரா…