தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-4628

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அலீ குர்ஆனுடனும், குர்ஆன் அலீயுடனும் இருக்கும். இந்த இரண்டும் ஒரு போதும் பிரியாது. இறுதியில் ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தில் என்னிடம் வந்து சேர்ந்து கொள்வார்கள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

(ஹாகிம்: 4628)

أَخْبَرَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَفِيدُ، ثنا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ نَصْرٍ، ثنا عَمْرُو بْنُ طَلْحَةَ الْقَنَّادُ، الثِّقَةُ الْمَأْمُونُ، ثنا عَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ الْبَرِيدِ، عَنْ أَبِيهِ قَالَ: حَدَّثَنِي أَبُو سَعِيدٍ التَّيْمِيُّ، عَنْ أَبِي ثَابِتٍ، مَوْلَى أَبِي ذَرٍّ قَالَ:

كُنْتُ مَعَ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ يَوْمَ الْجَمَلِ، فَلَمَّا رَأَيْتُ عَائِشَةَ وَاقِفَةً دَخَلَنِي بَعْضُ مَا يَدْخُلُ النَّاسَ، فَكَشَفَ اللَّهُ عَنِّي ذَلِكَ عِنْدَ صَلَاةِ الظُّهْرِ، فَقَاتَلْتُ مَعَ أَمِيرِ الْمُؤْمِنِينَ، فَلَمَّا فَرَغَ ذَهَبْتُ إِلَى الْمَدِينَةِ فَأَتَيْتُ أُمَّ سَلَمَةَ فَقُلْتُ: إِنِّي وَاللَّهِ مَا جِئْتُ أَسْأَلُ طَعَامًا وَلَا شَرَابًا وَلَكِنِّي مَوْلًى لِأَبِي ذَرٍّ، فَقَالَتْ: مَرْحَبًا فَقَصَصْتُ عَلَيْهَا قِصَّتِي، فَقَالَتْ: أَيْنَ كُنْتَ حِينَ طَارَتِ الْقُلُوبُ مَطَائِرَهَا؟ قُلْتُ: إِلَى حَيْثُ كَشَفَ اللَّهُ ذَلِكَ عَنِّي عِنْدَ زَوَالِ الشَّمْسِ، قَالَ: أَحْسَنْتَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «عَلِيٌّ مَعَ الْقُرْآنِ وَالْقُرْآنُ مَعَ عَلِيٍّ لَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ»

هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَأَبُو سَعِيدٍ التَّيْمِيُّ هُوَ عُقَيْصَاءُ ثِقَةٌ مَأْمُونٌ، وَلَمْ يُخَرِّجَاهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-4628.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-4566.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம் (முஹம்மத் பின் அப்துல்லாஹ்)

2 . அபூபக்ர் (முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் யூஸுஃப்)

3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத்

4 . அம்ர் பின் ஹம்மாத் பின் தல்ஹா

5 . அலீ பின் ஹாஷிம் பின் பரீத்

6 . ஹாஷிம் பின் பரீத்

7 . தீனார்-அகீஸா-உகைஸா-அபூஸயீத் அத்தைமீ

8 . அபூஸாபித் (அபூதர் (ரலி) அவர்களின் அடிமை)

9 . உம்மு ஸலமா (ரலி)


  • 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15430-தீனார்-அபூஸயீத் அத்தைமீ என்பவர் பற்றி, இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று இமாம் அபூபக்ர் பின் அய்யாஷ் அவர்களும்,
  • ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரை விமர்சனம் செய்துள்ளனர் என்று இமாம் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களும்,
  • இவர் நம்பகமானவர் அல்ல என்று இமாம் இப்ராஹீம் பின் யஃகூப் ஜோஸ்ஜானீ அவர்களும்,
  • இவர் (மனனத் திறனில்) உறுதியானவர் இல்லை என்று இமாம் நஸாஈ அவர்களும்,
  • கைவிடப்பட்டவர் என்று இமாம் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்களும் விமர்சித்துள்ளனர். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் சில இடத்தில் இவரை பலமானவர் என்றும் கூறியுள்ளார். மேலும் இவர் அலீ (ரலி) அவர்கள் வழியாக முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
  • ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள் மட்டுமே இவரை நம்பிக்கைக்குரியவர்; பலமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/4, லிஸானுல் மீஸான்-3/426)

2 . மேலும் இதில் வரும் ராவீ-1875-அபூஸாபித்-ஸாபித் என்பவர் பற்றி அபூதர் (ரலி) அவர்களின் அடிமை என்பதைத் தவிர வேறு தகவல் இல்லை என்பதால் இவர் அறியப்படாதவர் ஆவார்.

எனவே இது மிகப் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


இமாம் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் அறிவிப்பாளர்களை எடைபோடும் போது பல பலவீனமான அறிவிப்பாளர்களை நம்பகமானவர்கள் என்று கவனக் குறைவாக கூறியுள்ளார். பல பலவீனமான ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமான செய்தி என்று குறிப்பிடுவதால் இவர் அலட்சியப் போக்குடையவர் என்ற ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சனங்கள் செய்யப்பட்டுள்ளார்.

ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள், தான் விமர்சித்த அறிவிப்பாளர்களையே சில இடத்தில் பலமானவர் என்று கூறியுள்ளார் என்பதால் தான்,

قال ابن حجر: فكان هذا من عجائب ما وقع له من التساهل والغفلة.

பலவீனமான ஹதீஸ்களை ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என்று கூறும் இமாம் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்களின் பொடுபோக்குத் தன்மையை கண்டு நான் ஆச்சரியம் அடைகிறேன் என்று  இமாம் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அஸ்கலானீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூல்: அன்னுகது அலா கிதாபி இப்னிஸ் ஸலாஹ்-1/319) 


قال ابن تيمية: وكثيرًا ما يصحح الحاكم أحاديث يُجزم بأنها موضوعة لا أصل لها

இட்டுக்கட்டப்பட்ட; அடிப்படை ஆதாரமில்லாத; அதிகமான செய்திகளை ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என்று இமாம் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
கூறியுள்ளதாக இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் கூறியுள்ளார்கள்.

(நூல்: மஜ்மூஉல் ஃபதாவா-22/426)


1 . இந்தக் கருத்தில் உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4880 , அல்முஃஜமுஸ் ஸகீர்-720 , ஹாகிம்-4628 ,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.