“நீங்கள் ஆயுதமேந்திய மூன்று மாறுபட்ட படையினராக மாறும் நிலை (பிற்காலத்தில்) ஏற்படும். ஒரு படையினர் ஷாமில் இருப்பார்கள். மற்றொரு படையினர் யமன் நாட்டில் இருப்பார்கள். மற்றொரு படையினர் ஈராக்கில் இருப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்களை நான் அடைந்தால் நான் எந்தப் படையில் இருக்கவேண்டும் என்று எனக்கு (முடிவைக்) கூறுங்கள் என்று கூறினார்.
அதற்கு, “ஷாம் நாட்டுடன் சேர்ந்துக் கொள். அதுவே அல்லாஹ்வின் பூமியில் அல்லாஹ் தேர்வு செய்த படையாகும். அவன் தன்னுடைய அடியார்களில் தேர்வு செய்தோரை அதன் பக்கம் சேர்க்கிறான். உங்களால் ஷாமுடன் இணைய முடியாவிட்டால் (உங்களுக்கு நெருக்கமான அல்லது உங்கள் அஸல் பகுதியான) யமன் நாட்டின் படையுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்றுள்ள நீர் தடாகத்திலிருந்து தண்ணீர் அருந்துங்கள். (அதாவது மற்ற முஸ்லிம்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே தங்களை தயார் செய்துக் கொள்ளுங்கள்)…திண்ணாக அல்லாஹ், எனக்காக ஷாமுக்கும், ஷாம்வாசிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூகுதைலா (ரலி) அவர்கள், அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 17005)حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، وَيَزِيدُ بْنُ عَبْدِ رَبِّهِ، قَالَا: حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ: حَدَّثَنِي بَحِيرُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي قُتَيْلَةَ، عَنِ ابْنِ حَوَالَةَ، أَنَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«سَيَصِيرُ الْأَمْرُ إِلَى أَنْ تَكُونُوا جُنُودًا مُجَنَّدَةً، جُنْدٌ بِالشَّامِ، وَجُنْدٌ بِالْيَمَنِ، وَجُنْدٌ بِالْعِرَاقِ» ، قَالَ ابْنُ حَوَالَةَ: خِرْ لِي يَا رَسُولَ اللَّهِ إِنْ أَدْرَكْتُ ذَاكَ، قَالَ: «عَلَيْكَ بِالشَّامِ، فَإِنَّهُ خِيرَةُ اللَّهِ مِنْ أَرْضِهِ، يَجْتَبِي إِلَيْهِ خِيرَتَهُ مِنْ عِبَادِهِ، فَإِنْ أَبَيْتُمْ فَعَلَيْكُمْ بِيَمَنِكُمْ، وَاسْقُوا مِنْ غُدُرِكُمْ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ تَوَكَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17005.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16663.
சமீப விமர்சனங்கள்