அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் குராஸானிலிருந்து கருப்புக் கொடிகள் வருவதைக் கண்டால் அங்கு செல்லுங்கள். ஏனென்றால் அங்குதான் அல்லாஹ்வின் பிரதிநிதியான மஹ்தீ உள்ளார்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 22387)حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شَرِيكٍ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا رَأَيْتُمُ الرَّايَاتِ السُّودَ قَدْ جَاءَتْ مِنْ قِبَلِ خُرَاسَانَ، فَأْتُوهَا؛ فَإِنَّ فِيهَا خَلِيفَةَ اللَّهِ الْمَهْدِيَّ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21353.
Musnad-Ahmad-Shamila-22387.
Musnad-Ahmad-Alamiah-21353.
Musnad-Ahmad-JawamiulKalim-21796.
- 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19163-ஷரீக் பின் அப்துல்லாஹ் பற்றி, இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், அதிகம் தவறிழைப்பவர் என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-2802)
- 2 . மேலும் இதில் வரும் ராவீ-29905-அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், ஆதாரம்கொள்ளத்தக்கவர் அல்ல என்றும் விமர்சித்துள்ளனர்.
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/162, தக்ரீபுத் தஹ்தீப்-4768)
3 . மேலும் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கும் ராவீ-24545-அபூகிலாபா (அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அம்ர்) அவர்கள், ஸவ்பான் (ரலி) அவர்களிடம் நேரடியாக எந்த ஹதீஸையும் கேட்டதில்லை என இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் கூறியுள்ளார்.
4 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் அதிகம் முர்ஸலாக அறிவிப்பவர் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/339, தக்ரீபுத் தஹ்தீப்-1/508)
5 . தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அலாயீ ஆகியோர் இவரை தத்லீஸ் செய்பவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/85)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-4084 .
சமீப விமர்சனங்கள்