அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களது கருவூலத்திற்காக (ஆட்சிக்காக) மூன்றுபேர் சண்டையிடுவர். மூன்றுபேரும் ஒரு கலீபாவின் மகன்களே. பின்னர் அது அம்மூவரில் எவருக்கும் கிடைக்காது. அதன்பிறகு, கிழக்கிலிருந்து கருப்புக்கொடியுடைவர்கள் தோன்றுவார்கள். வேறு எந்தக் கூட்டமும் உங்களிடம் சண்டையிடாத அளவுக்கு அவர்கள் உங்களிடம் சண்டையிடுவார்கள்.
(பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேறு சில செய்திகளை கூறினார்கள். அவற்றை நான் மனனமிடவில்லை)
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அவர்களை நீங்கள் கண்டால் பனிக்கட்டியில் தவழ்ந்து சென்றாவது அக்கூட்டத்தின் தலைவரிடம் உடன்படிக்கை செய்யுங்கள். ஏனென்றால் அவர் தான் அல்லாஹ்வின் பிரதிநிதியான மஹ்தீ ஆவார்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
(இப்னுமாஜா: 4084)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَأَحْمَدُ بْنُ يُوسُفَ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَقْتَتِلُ عِنْدَ كَنْزِكُمْ ثَلَاثَةٌ، كُلُّهُمُ ابْنُ خَلِيفَةٍ، ثُمَّ لَا يَصِيرُ إِلَى وَاحِدٍ مِنْهُمْ، ثُمَّ تَطْلُعُ الرَّايَاتُ السُّودُ مِنْ قِبَلِ الْمَشْرِقِ، فَيَقْتُلُونَكُمْ قَتْلًا لَمْ يُقْتَلْهُ قَوْمٌ» – ثُمَّ ذَكَرَ شَيْئًا لَا أَحْفَظُهُ فَقَالَ – فَإِذَا رَأَيْتُمُوهُ فَبَايِعُوهُ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ، فَإِنَّهُ خَلِيفَةُ اللَّهِ الْمَهْدِيُّ
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-4074.
Ibn-Majah-Shamila-4084.
Ibn-Majah-Alamiah-4074.
Ibn-Majah-JawamiulKalim-4082.
2 . இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூகிலாபா —> ஸவ்பான் (ரலி)
பார்க்க: அஹ்மத்-22387 ,
- அபூகிலாபா —> அபூஅஸ்மா —> ஸவ்பான் (ரலி)
பார்க்க: இப்னு மாஜா-4084 , முஸ்னத் பஸ்ஸார்-, ஹாகிம்-,
மேலும் பார்க்க: இப்னு மாஜா-4082.
சமீப விமர்சனங்கள்