தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-605

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

(பாவங்களால்) குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டுப் பாவமீட்சி கோருகின்ற இறைநம்பிக்கையுள்ள அடியானை, திண்ணமாக அல்லாஹ் விரும்புகிறான்.

இதை முஹம்மது பின் அல்ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள் தம் தந்தை அலீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 605)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنِي عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ النَّرْسِيُّ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مَسْلَمَةُ الرَّازِيُّ، عَنْ أَبِي عَمْرٍو الْبَجَلِيِّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سُفْيَانَ الثَّقَفِيِّ، عَنْ أَبِي جَعْفَرٍ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ مُحَمَّدٍ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ اللَّهَ يُحِبُّ الْعَبْدَ الْمُؤْمِنَ الْمُفَتَّنَ التَّوَّابَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-605.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-591.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
(அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களின் மகன்)

2 . அப்துல்அஃலா பின் ஹம்மாத்

3 . தாவூத் பின் அப்துர்ரஹ்மான்

4 . அபூஅப்துல்லாஹ்-மஸ்லமா அர்ராஸீ

5 . அபூஅம்ர் அல்பஜலீ-உபைதா பின் அப்துர்ரஹ்மான்

6 . அப்துல்மலிக் பின் ஸுஃப்யான் அஸ்ஸகஃபீ

7 . முஹம்மத் பின் அலீ பின் ஹுஸைன்-முஹம்மத் அல்பாகிர்

8 . முஹம்மத் பின் அலீ பின் அபூதாலிப்-இப்னுல் ஹனஃபிய்யா (ரஹ்)

9 . அலீ பின் அபூதாலிப் (ரலி)


  • குறிப்பு: இந்தச் செய்தி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் அவர்களின் மகனார் அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் அறிவித்த செய்திகளாகும். இது போன்ற செய்திகளுக்கு ஸவாயித் அப்துல்லாஹ் அலா முஸ்னத் அஹ்மத் (முஸ்னத் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    நூலில் அப்துல்லாஹ் அவர்கள் சேர்த்த கூடுதலான செய்திகள்) என்று கூறப்படும்.
  • இவைகளில் சிலவை அப்துல்லாஹ் அவர்கள் தனது தந்தை அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்களிடமிருந்து அறிவித்ததாக இடம்பெற்றிருக்கும். வேறுசிலவை மற்றவர்களிடமிருந்து அறிவித்ததாக இடம்பெற்றிருக்கும்.
  • ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள் ஆய்வுசெய்துள்ள முஸ்னத் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அர்ரிஸாலா
    பதிப்பில் ஸவாயித் செய்திகளை அடையாளம் காண்பதற்காக ஹதீஸ் எண்ணுக்கு முன்பாக கருப்பு நிறத்தில் அல்லது சிகப்பு நிறத்தில் சிறிய வட்டம் போடப்பட்டிருக்கும்.

இந்தச் செய்தியை அறிவிக்கும், மேற்கூறப்பட்ட 9 அறிவிப்பாளர்களில் 4, 5, 6 ஆகிய வரிசைகளில் உள்ள அறிவிப்பாளர்கள் விசயத்தில் விமர்சனம் உள்ளது.


1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-44435-அபூஅப்துல்லா மஸ்லமா அர்ராஸீ என்பவர் யார் என அறியப்படாதவா் ஆவார்.

2 . மேலும் இதில் வரும் ராவீ-27773-அபூஅம்ர் அல்பஜலீ-உபைதா பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள், இவர் நம்பகமானவா்களின் பெயர்களைப் பயன்படுத்தி பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார்.

3 .  மேலும் இதில் வரும் ராவீ-26517-அப்துல்மலிக் பின் ஸுஃப்யான் அஸ்ஸகஃபீ என்பவர் யாரென அறியப்படாதவா் ஆவார்.

(நூல்கள்: லிஸானுல் மீஸான்-5/364, 9/132, தஃஜீலுல் மன்ஃபஆ-2/515)

ஆகவே இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான அறிவிப்பாளர்தொடர் என்றுகூடச் சொல்லலாம்.


1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துல்லாஹ் பின் ஸுஃப்யான், அப்துல்மலிக் பின் ஸுஃப்யான் —> முஹம்மத் அல்பாகிர் —> இப்னுல் ஹனஃபிய்யா —> அலீ (ரலி)

பார்க்க: ஃபளாஇலுஸ் ஸஹாபா-அஹ்மத்-1191 , அஹ்மத்-605 , 810 , முஸ்னத் அபீ யஃலா-483 , அல்குனா-தூலாபீ-1469 , ஹில்யதுல் அவ்லியா-3/178 , அல்மக்ஸிதுல் அலீ-ஸவாயித் அபூயஃலா-1739 ,

இந்த நூல்களில், இந்தச் செய்தி மஸ்லமா அர்ராஸீ என்பவர் வழியாகவே வந்திருப்பதால் இவை அனைத்தும் பலவீனமானவையாகும்.


  • யஸீத் பின் தல்ஹா —> முஹம்மத் அல்பாகிர் —> இப்னுல் ஹனஃபிய்யா —> அலீ (ரலி)

பார்க்க: முஸ்னத் ஹாரிஸ்-1076 , பஹ்ருல் ஃபவாயித்-132 ,


  • முஸ்னத் ஹாரிஸ்-1076.

مسند الحارث = بغية الباحث عن زوائد مسند الحارث (2/ 972)
1076 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ الْوَاقِدِيُّ , ثنا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ , عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سُفْيَانَ , عَنْ يَزِيدَ بْنِ طَلْحَةَ بْنِ رُكَانَةَ , عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ , عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ «اللَّهَ يُحِبُّ الْعَبْدَ الْمُفَتَّنَ التَّوَّابَ»

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41876-முஹம்மது பின் உமர் அல்வாகிதீ என்பவர் கல்வியாளர் என்று பெயர்பெற்றிருந்தாலும் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று பல அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/656, தக்ரீபுத் தஹ்தீப்-1/882)

சில அறிஞர்கள் இவர் கூறும் வரலாற்றுத் தகவல்கள், யுத்தம் சம்பந்தமான செய்திகள் போன்றவற்றை மட்டுமே ஆதாரமாக ஏற்கலாம் என்றும், ஹதீஸ் விசயத்தில் ஏற்கக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இதில் வரும் பலரைப் பற்றி விமர்சனம் உள்ளது என்பதால் இதுவும் மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடர் ஆகும். இதே அறிவிப்பாளர்தொடர்தான் பஹ்ருல் ஃபவாயித் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-700 , அல்முஃஜமுல் கபீர்-11810 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.