தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-6610

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு அடிமையை வாங்கினால் அவரின் நெற்றி முடியை பிடித்தவாறு, “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் கைரிஹா, வ கைரி மா ஜபில்தஹா அலைஹி”  என்று கூறவும்.

(பொருள்: அல்லாஹ்வே! இதன் மூலம் ஏற்படும் அனைத்து நலவுகளையும்; இதை எந்த நியதியின்படி நீ படைத்துள்ளாயோ அந்த நலவுகளையும் உன்னிடம் கேட்கிறேன்.)

உங்களில் ஒருவர், ஒரு ஒட்டகத்தை வாங்கினால் அதன் திமிலைப் பிடித்துக் கொண்டு இதே போன்று கூறவும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(abi-yala-6610: 6610)

حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا حِبَّانُ بْنُ عَلِيٍّ الْعَنَزِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِذَا اشْتَرَى أَحَدُكُمْ خَادِمًا فَلْيَأْخُذْ بِنَاصِيَتِهَا وَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذُرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-6610.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-6575.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூயஃலா இமாம் (அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அலீ பின் முஸன்னா)

2 . தாவூத் பின் அம்ர்

3 . ஹிப்பான் பின் அலீ

4 . முஹம்மத் பின் அஜ்லான் (இப்னு அஜ்லான்)

5 . ஸயீத் பின் கைஸான் (ஸயீத் அல்முக்ரிஃ)

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11117-ஹிப்பான் பின் அலீ அல்அனஸீ என்பவர் பற்றி, இவர் பலவீனமானவர் என்று இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னுல் ஜவ்ஸீ,பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    அவர்கள், இவரின் செய்திகளிலும் இவரின் சகோதரர் மின்தல் பின் அலீ என்பவரின் செய்திகளிலும் சில தவறுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் ஹதீஸ்துறை அறிஞர்களிடம் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இவர் விடப்பட்டவர் என்றும், பலவீனமானவர் என்றும் கூறியுள்ளார்.
  • இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    பஸ்ஸார், தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகியோர் இவர் சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் ஃபிக்ஹ் அறிஞர், சிறப்புக்குரியவர் தான் என்றாலும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/270, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/348, அல்காஷிஃப்-2/232, தஹ்தீபுத் தஹ்தீப்-1/345, தக்ரீபுத் தஹ்தீப்-1/217)

மேற்கண்ட தகவல்களிலிருந்து இவர் மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை என்றும், இவர் போன்று மற்றவர்கள் அறிவித்தால் அவை சரியானவை என்றும் தெரிந்துக் கொள்ளலாம். இவர் மற்ற பலமானவர்களுக்கு மாற்றமான அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6610 , …


மேலும் பார்க்க: அபூதாவூத்-2160 .