பாடம்:
திருமணம் குறித்து வந்துள்ள மற்ற பொதுவானவை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் அல்லது ஒரு அடிமையை வாங்கினால், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா, வ கைர மா ஜபில்தஹா அலைஹி. வ அவூது பிக மின் ஷர்ரிஹா, வமின் ஷர்ரி மா ஜபில்தஹா அலைஹி” என்று கூறவும்.
(பொருள்: அல்லாஹ்வே! இதன் மூலம் ஏற்படும் அனைத்து நலவுகளையும்; இதை எந்த நியதியின்படி நீ படைத்துள்ளாயோ அந்த நலவுகளையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் மூலம் ஏற்படும் அனைத்து தீங்குகளையும்; இதை எந்த நியதியின்படி நீ படைத்துள்ளாயோ அந்த தீங்குகளையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)
உங்களில் ஒருவர், ஒரு ஒட்டகத்தை வாங்கினால் அதன் திமிலைப் பிடித்துக் கொண்டு இதே போன்று கூறவும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
அபூஸயீத் (அப்துல்லாஹ் பின் ஸயீத்) அவர்கள், மணப்பெண், அடிமை விசயத்தில், “பிறகு நெற்றி முடியை பிடித்து அருள்வளம் பெறுவதற்காக துஆ செய்யட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூடுதலாக அறிவித்துள்ளார்.
(அபூதாவூத்: 2160)بَابٌ فِي جَامِعِ النِّكَاحِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا، فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ».
قَالَ أَبُو دَاوُدَ: زَادَ أَبُو سَعِيدٍ، ثُمَّ لِيَأْخُذْ بِنَاصِيَتِهَا وَلْيَدْعُ بِالْبَرَكَةِ فِي الْمَرْأَةِ وَالْخَادِمِ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1845.
Abu-Dawood-Shamila-2160.
Abu-Dawood-Alamiah-1845.
Abu-Dawood-JawamiulKalim-1848.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்.
2 . உஸ்மான் பின் அபூஷைபா,பிறப்பு ஹிஜ்ரி 156
இறப்பு ஹிஜ்ரி 239
வயது: 83
3 . அப்துல்லாஹ் பின் ஸயீத்.
4 . ஸுலைமான் பின் ஹய்யான் (அபூகாலித்).
5 . இப்னு அஜ்லான்.
6 . அம்ர் பின் ஷுஐப்.
7 . ஷுஐப் பின் முஹம்மத்.
8 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).
இதில் இடம்பெறும் ஸுலைமான் பின் ஹய்யான், இப்னு அஜ்லான் ஆகியோர் பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர் என்பதால் இவர்கள் ஹஸன் தர அறிவிப்பாளர்கள் என்பதால் இந்த செய்தி ஹஸன் தர செய்தியாகும்.
- இந்தச் செய்தியை இப்னு அஜ்லான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்கத்தான், ஸயீத் பின் அபூஅய்யூப், யஹ்யா பின் அபூஅய்யூப், ஸுலைமான் பின் ஹய்யான் (அபூகாலித்), அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் ஆகிய 6 பேரும் இப்னு அஜ்லான் —> அம்ர் பின் ஷுஐப் —> ஷுஐப் பின் முஹம்மத் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். - இந்தச் செய்தியை இப்னு அஜ்லான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹிப்பான் பின் அலீ அல்அனஸீ என்பவர், இப்னு அஜ்லான் —> ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
ஹிப்பான் பின் அலீ என்பவரை சிலர் பலவீனமானவர் என்றும் சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர். எனவே மற்ற அதிகமான, பலமானவர்களுக்கு மாற்றமாக இவர் அறிவித்திருப்பதால் இவர் அறிவிக்கும் செய்தி முன்கர் எனும் மறுக்கப்படவேண்டிய அறிவிப்பாளர்தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இப்னு அஜ்லான் —> அம்ர் பின் ஷுஐப் —> ஷுஐப் பின் முஹம்மத் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பார்க்க: கல்கு அஃப்ஆலில் இபாத்-புகாரீ-208 , 209 , இப்னு மாஜா-1918 , 2252 , அபூதாவூத்-2160 , குப்ரா நஸாயீ-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
- கல்கு அஃப்ஆலில் இபாத்-புகாரீ-208 , 209.
خلق أفعال العباد للبخاري ط-أخرى (2/ 109)
208 – حَدَّثَنَا مُسَدَّدٌ ، قال حَدَّثَنَا يَحْيَى ، عَنِ ابْنِ عَجْلاَنَ ، قال حَدَّثَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا أَفَادَ أَحَدُكُمُ الْمَرْأَةَ أَوِ الْجَارِيَةَ أَوِ الدَّابَّةِ ، أَوِ الْغُلاَمِ ، فَلْيَقُلْ أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا ، وَخَيْرِ مَا جُبِلَتْ عَلَيْهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا ، وَشَرِّ مَا جُبِلَتْ عَلَيْهِ.
209 – قَالَ أَبُو عَبْدِ اللهِ : وَرَوَاهُ عُبَيْدُ اللهِ ، عَنْ سُفْيَانَ ، عَنِ ابْنِ عَجْلاَنَ ، عَنْ عَمْرٍو ، نَحْوَهُ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் முடித்தால் அல்லது ஒரு பெண் அடிமையையோ அல்லது வாகனத்தையோ அல்லது ஒரு ஆண் அடிமையையோ வாங்கினால் அதன் நெற்றி முடியை பிடித்தவாறு, “அஸ்அலுக மின் கைரிஹா, வ கைரி மா ஜுபிலத் அலைஹி. வ அவூது பிக மின் ஷர்ரிஹா, வ ஷர்ரி மா ஜுபிலத் அலைஹி” என்று கூறவும்.
(பொருள்: அல்லாஹ்வே! இதன் மூலம் ஏற்படும் அனைத்து நலவுகளையும்; இதை எந்த நியதியின்படி படைக்கப்பட்டுள்ளதோ அந்த நலவுகளையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் மூலம் ஏற்படும் அனைத்து தீங்குகளையும்; இதை எந்த நியதியின்படி படைக்கப்பட்டுள்ளதோ அந்த தீங்குகளையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
அபூஅப்தில்லாஹ்-புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறுகிறார்:
இந்த செய்தியை உபைதுல்லாஹ் பின் மூஸா அவர்கள், ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> இப்னு அஜ்லான் —> அம்ர் பின் ஷுஐப் என்ற அறிவிப்பாளர்தொடரில் (மீதியை) மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6610 .
சமீப விமர்சனங்கள்