தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6749

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18

பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். அவள் அடிமைப் பெண்ணாயிருப்பினும், சுதந்திரம் பெற்றவளாய் இருப்பினும் சரியே!38

 ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

உத்பா இப்னு அபீ வக்காஸ் தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் ‘ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். எனவே, அவனை நீ பிடித்து வைத்துக் கொள்’ என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டின்போது ஸஅத் (ரலி) அவர்கள் அவனைப் பிடித்தார்கள். மேலும், அவர்கள், ‘இவன் என் சகோதரரின் மகன். என் சகோதரர் இவனைக் கைப்பற்றும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியுள்ளார்’ என்றார்கள்.

அப்போது ஸம்ஆவின் புதல்வர் அப்து (ரலி) அவர்கள் எழுந்து, இவன் என் சகோதரன் என் தந்தையின் அடிமைப் பெண்ணுடைய மகன். அவரின் படுக்கையில் (அதாவது அவரின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்’ என்று கூறினார்கள். எனவே, இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) சென்றனர். ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரருடைய மகன். அவர் இவனைக் கைப்பற்றிக் கொள்ளும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்’ என்று கூற, ஸம்ஆவின் புதல்வர் அப்து (ரலி) அவர்கள், ‘(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன். அவரின் படுக்கையில் (அவரின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அப்து இப்னு ஸம்ஆவே! இவன் உனக்கே உரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய அதிகாரத்தில் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்பே உரியது’ என்று கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியும்) ஸம்ஆவின் புதல்வி(யுமான) சவ்தா (ரலி) அவர்களிடம், ‘இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு மறைத்துக்கொள்!’ என்றார்கள். சாயலில் அவன் உத்பாவைப் போன்று இருந்ததை நபியவர்கள் பார்த்ததே இதற்குக் காரணம். அதன் பிறகு அந்த மனிதர் இறக்கும்வரை அவரை சவ்தா (ரலி) அவர்கள் பார்க்கவில்லை.39

Book : 86

(புகாரி: 6749)

بَابٌ: الوَلَدُ لِلْفِرَاشِ، حُرَّةً كَانَتْ أَوْ أَمَةً

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:

كَانَ عُتْبَةُ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدٍ: أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي، فَاقْبِضْهُ إِلَيْكَ، فَلَمَّا كَانَ عَامَ الفَتْحِ أَخَذَهُ سَعْدٌ، فَقَالَ: ابْنُ أَخِي عَهِدَ إِلَيَّ فِيهِ، فَقَامَ عَبْدُ بْنُ زَمْعَةَ، فَقَالَ: أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ، فَتَسَاوَقَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، ابْنُ أَخِي، قَدْ كَانَ عَهِدَ إِلَيَّ فِيهِ، فَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ: أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الحَجَرُ» ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ: «احْتَجِبِي مِنْهُ» لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ، فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللَّهَ





இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
(மிகப் பலமானவர்)
.

2 . அப்துல்லாஹ் பின் யூஸுஃப்-அல்கலாயீ (மிகப் பலமானவர்).

3 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்-மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் அனஸ்
(மிகப் பலமானவர்)
.

4 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப் (மிகப் பலமானவர்).

5 . உர்வா பின் ஸுபைர்-அல்அஸதீ (பலமானவர்).

6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
பின்த் அபூபக்ர் (ரலி)
(நபித்தோழர்)
.


மேலும் பார்க்க: புகாரி-2053.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.