தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-2550

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், “அஸ்தஃக்ஃபிருல்லாஹல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யல் கய்யூம், வ அதூபு இலைஹ்”

(பொருள்: நான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புத் தேடி அவனிடமே திரும்புகின்றேன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்)

என்று மூன்று தடவை கூறினால் அவருடைய பாவங்கள் (அல்லாஹ்வால்) மன்னிக்கப்படும். அவர் போரில் புறமுதுகிட்டு ஓடியிருந்தாலும் (அதையும் மன்னிக்கப்படும்).

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

 

(ஹாகிம்: 2550)

حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مَيْمُونٍ الرَّقِّيُّ، ثنا مُحَمَّدُ بْنُ يُوسُفَ الْفِرْيَابِيُّ، ثنا إِسْرَائِيلُ، عَنْ أَبِي سِنَانٍ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنِ ابنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ قَالَ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ، وَأَتُوبُ إِلَيْهِ، ثَلَاثًا غُفِرَتْ ذُنُوبُهُ، وَإِنْ كَانَ فَارًّا مِنَ الزَّحْفِ»

هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ وَلَمْ يُخَرِّجَاهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-2550.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


ஆய்வின் சுருக்கம்:

1 . இந்தச் செய்தியை இஸ்ராஈல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மிகப் பலமானவரான அப்துல்லாஹ் பின் நுமைர் அவர்கள் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளார்.

2 . இந்தச் செய்தியின் கருத்து, சிறிது மாறியதாக அபூஸயீத் (ரலி) வழியாக வந்துள்ளது. இந்தச் செய்தியும் அபூஸயீத் (ரலி) அவர்களின் சொல்லாக வந்திருப்பதே உண்மையாகும்.

3 . ஆரம்பத்தில் ஹதீஸைத் தொகுத்த அறிஞர்களிடம் இந்தச் செய்தி நபித்தோழரின் சொல்லாகவே அறியப்பட்டுள்ளது.

4 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்களுக்கு முன்பிருந்த நூலாசிரியர்கள் நபியின் சொல்லாக வந்துள்ள வேறு பலவீனமான செய்தியையே பதிவு செய்துள்ளனர்.

எனவே இந்தச் செய்தி, பாவமன்னிப்புக் கேட்கும்போது அல்லாஹ் பாவங்களை மன்னிப்பான் என்று நபித்தோழர்கள் விளங்கியதின் படி பொதுவாக ஆய்வு செய்து கூறிய தகவலாக இருக்கலாம் என்று யாஸிர் ஃபத்ஹீ என்ற அறிஞர் கூறியுள்ளார்.

(நூல்: ஃபள்லுர்ரஹீமுல் வதூத்-18/427)

வேறு சில அறிஞர்கள் இதை சரியானது என்றும், ஹஸன் தரம் என்றும் கூறியுள்ளனர்…


1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இஸ்ராஈல் —> அபூஸினான் —> அபுல்அஹ்வஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29450 , ஹாகிம்-1884 , 2550 ,


  • அபூஇஸ்ஹாக் —> அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8541 ,


2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


3 . ஸைத் பின் பவ்லா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1517 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.