தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Alilal-Ibn-Abi-Hatim-2819

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு அபூஹாதிம் அவர்கள் கூறியதாவது:

அபூஸுர்ஆ அவர்கள், ஸயீத் பின் மன்ஸூர் —> ஃபுலைஹ் பின் ஸுலைமான் —> அபூதுவாலா —> ஸயீத் பின் யஸார் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் கீழ்க்கண்ட ஹதீஸை எங்களுக்கு அறிவித்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரும் கல்வியை உலக ஆதாயத்துக்காக மட்டுமே ஒருவர் கற்றால் அவர் மறுமையில் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்.


அபூஸுர்ஆ அவர்கள் இந்தச் செய்தியை எங்களுக்கு அறிவித்துவிட்டு, “இதை இவ்வாறு ஃபுலைஹ் பின் ஸுலைமான் தான் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். ஆனால் ஸாயிதா அவர்கள், அபூதுவாலா —> முஹம்மத் பின் யஹ்யா பின் ஹிப்பான் —> ஈராக்கைச் சேர்ந்த ஒரு கூட்டத்தினர் —>  அபூதர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார். நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை” என்று கூறினார்கள்.

(alilal-ibn-abi-hatim-2819: 2819)

وَسَمِعتُ أَبا زُرعَةَ وَذَكَرَ حَدِيثًا حَدَّثَنا بِهِ عَن سَعِيدِ بنِ مَنصُورٍ ، عَن فُلَيحِ بنِ سُلَيمانَ ، عَن أَبِي طُوالَةَ ، عَن سَعِيدِ بنِ يَسارٍ ، عَن أَبِي هُرَيرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قالَ :

مَن تَعَلَّمَ عِلمًا مِمّا يُبتَغَى بِهِ وَجهُ اللهِ لاَ يَتَعَلَّمُهُ إِلاَّ لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنَ الدُّنيا ، لَم يَجِد عَرفَ الجَنَّةِ يَعنِي : رِيحَها.
فَسَمِعتُ أَبا زُرعَةَ يَقُولُ : هَكَذا رَواهُ ! وَرَواهُ زائِدَةُ ، عَن أَبِي طُوالَةَ ، عَن مُحَمَّدِ بنِ يَحيَى بنِ حِبّانَ ، عَن رَهطٍ مِن أَهلِ العِراقِ ، عَن أَبِي ذَرٍّ ، مَوقُوفًا وَلَم يَرفَعهُ.


Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-2819.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.




பார்க்க: அபூதாவூத்-3664 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.