பாடம்:
அல்லாஹ்விற்காக இல்லாமல் பிறருக்காக கல்வியைக் கற்பது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரும் கல்வியை உலக ஆதாயத்துக்காக மட்டுமே ஒருவர் கற்றால் அவர் மறுமையில் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(அபூதாவூத்: 3664)بَابٌ فِي طَلَبِ الْعِلْمِ لِغَيْرِ اللَّهِ تَعَالَى
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ أَبِي طُوَالَةَ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرٍ الْأَنْصَارِيِّ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللَّهِ عَزَّ وَجَلَّ لَا يَتَعَلَّمُهُ إِلَّا لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنَ الدُّنْيَا، لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ» يَعْنِي رِيحَهَا
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3664.
Abu-Dawood-Alamiah-3179.
Abu-Dawood-JawamiulKalim-3181.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . அபூபக்ர் பின் அபூஷைபா
3 . ஸுரைஜ் பின் நுஃமான்
4 . ஃபுலைஹ் பின் ஸுலைமான்
5 . அபூதுவாலா-அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் மஃமர்
6 . ஸயீத் பின் யஸார்
7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
அபூஸுர்ஆ அவர்கள், இந்தச் செய்தியை (ஃபுலைஹ் பின் ஸுலைமானை விட மிக மிக பலமானவரான) ஸாயிதா பின் குதாமா அவர்கள், அபூதுவாலா —> முஹம்மத் பின் யஹ்யா பின் ஹிப்பான் —> ஈராக்கைச் சேர்ந்த ஒரு கூட்டத்தினர் —> அபூதர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார். நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-2819)
எனவே இந்த அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும். இதில் இடம்பெறும், ஈராக்கைச் சேர்ந்த ஒரு கூட்டத்தினர் என்பவர்கள் யார் என்ற விவரம் இல்லை. இவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டார்களா? கேட்கவில்லையா? என்ற தகவலும் இல்லை என்பதால் இது பலவீனமானதாகும்.
முக்பில் வாதிஈ அவர்கள் இந்தக் காரணத்தைக் கூறி இதை தனது முஅல்லாவில் குறையுள்ள செய்தியாகக் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அஹாதீஸு முஅல்லா ளாஹிருஹா ஸிஹ்ஹா-466)
الضعفاء الكبير للعقيلي (3/ 466):
وَمِنْ حَدِيثِهِ: مَا حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي طُوَالَةَ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللَّهِ لَا يَتَعَلَّمُهُ إِلَّا لَيُصِيبَ بِهِ عَرْضًا مِنْ عَرَضِ الدُّنْيَا لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ» يَعْنِي رِيحَهَا. الرِّوَايَةُ فِي هَذَا الْبَابِ لَيِّنَةٌ
ஃபுலைஹ் பின் ஸுலைமான் அவர்களைப் பற்றிய குறிப்பில் இந்த செய்தியை குறிப்பிட்ட உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் இந்தக் கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை என்று கூறியுள்ளார்.
(நூல்: அள்ளுஅஃபாஉல் கபீர்-3-/466)
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (11/ 10)
2087- وَسُئِلَ عَنْ حَدِيثِ سَعِيدِ بْنِ يَسَارٍ أَبِي الْحُبَابِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَعَلَّمَ عِلْمًا يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ عَزَّ وَجَلَّ لَا يَتَعَلَّمُهُ إِلَّا لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنَ الدُّنْيَا، لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ.
فَقَالَ: يَرْوِيهِ أَبُو طَوَالَةَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرحمن بن مَعْمَرٍ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ أَبُو يَحْيَى، عَنْ أَبِي طُوَالَةَ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَخَالَفَهُ مُحَمَّدُ بْنُ عُمَارَةَ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ الْحَزْمِيُّ؛
فَرَوَاهُ عَنْ أَبِي طُوَالَةَ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي سَالِمٍ مُرْسَلًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالْمُرْسَلُ أَشْبَهُ بِالصَّوَابِ.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களைக் கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், ஃபுலைஹ் பின் ஸுலைமானுக்கு மாற்றமாக முஹம்மத் பின் உமாரா அவர்கள், அபூதுவாலா —> பனூ ஸாலிம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருமனிதர் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழர் விடுபட்டு முர்ஸலாக அறிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுவிட்டு முர்ஸலாக உள்ள செய்தியே உண்மையானது என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-2087)
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-252 , அபூதாவூத்-3664 , முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-,
2 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
3 . அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
4 . இப்னு உமர்
5 . அனஸ்
6 . முஆவியா பின் ஹைதா
சமீப விமர்சனங்கள்