தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1582

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று காரியங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் ருசியைச் சுவைத்து விட்டார்.

1 . வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டும் வணங்குதல்.
2 . ஒவ்வொரு வருடமும் தனது பொருளின் ஜகாத்தை மன விருப்பத்துடன் வழங்குதல்.
3 . கிழப் பருவம் அடைந்தது, சொறி பிடித்தது, நோயுற்றது, அற்பமானது ஆகியவற்றைக் கொடுக்காமல் நடுத்தரமானதை வழங்குதல்.

அல்லாஹ் உங்களிடம் (அவைகளில்) சிறந்தவற்றைக் கேட்கவில்லை. கெட்டவற்றை (தருமாறு) அவன் கட்டளையிடவில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஆவியா அல்ஃகாளிரீ ?

(அபூதாவூத்: 1582)

قَالَ أَبُو دَاوُدَ: وَقَرَأْتُ فِي كِتَابِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ بِحِمْصَ عِنْدَ آلِ عَمْرِو بْنِ الْحَارِثِ الْحِمْصِيِّ، عَنِ الزُّبَيْدِيِّ، قَالَ: وَأَخْبَرَنِي يَحْيَى بْنُ جَابِرٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُعَاوِيَةَ الْغَاضِرِيِّ، مِنْ غَاضِرَةِ قَيْسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

ثَلَاثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ طَعِمَ طَعْمَ الْإِيمَانِ: مَنْ عَبَدَ اللَّهَ وَحْدَهُ وَأَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَعْطَى زَكَاةَ مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ، رَافِدَةً عَلَيْهِ كُلَّ عَامٍ، وَلَا يُعْطِي الْهَرِمَةَ، وَلَا الدَّرِنَةَ، وَلَا الْمَرِيضَةَ، وَلَا الشَّرَطَ اللَّئِيمَةَ، وَلَكِنْ مِنْ وَسَطِ أَمْوَالِكُمْ، فَإِنَّ اللَّهَ لَمْ يَسْأَلْكُمْ خَيْرَهُ، وَلَمْ يَأْمُرْكُمْ بِشَرِّهِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1582.
Abu-Dawood-Alamiah-1349.
Abu-Dawood-JawamiulKalim-1352.




சுருக்கம்:

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர் முன்கதிஃ என்றாலும் வேறுசில செய்திகள் மூலம் சில அறிஞர்கள் சரியானது என்று கூறியுள்ளனர்.

என்றாலும் அறிஞர் பி.ஜே போன்றவர்கள் பலவீனமானது என்று கூறியுள்ளனர். இதைப் பற்றி பார்க்கவேண்டிய தகவல் அதிகம் இருப்பதால் இன்ஷா அல்லாஹ் பிறகு தரம் பதிவிடப்படும்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்.

2 . அம்ர் பின் ஹாரிஸ் அல்ஹிம்ஸீ அவர்களின் குடும்பத்தார்.

3 . அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின் நூல்.

4 . முஹம்மத் பின் வலீத்-அஸ்ஸுபைதீ

5 . யஹ்யா பின் ஜாபிர்

6 . ஜுபைர் பின் நுஃபைர்

7 . அப்துல்லாஹ் பின் முஆவியா அல்ஃகாளிரீ?


الجرح والتعديل لابن أبي حاتم (5/ 151):
693 – ‌عبد ‌الله ‌بن ‌معاوية ‌الغاضري له صحبة روى عنه جبير بن نفير سمعت أبي يقول ذلك


(நூல்: அஸ்ஸஹீஹா-1046)


الإرشادات في تقوية الأحاديث بالشواهد والمتابعات (ص446):
قلت: وأبو داود؛ إنما رجع إلى كتاب عبد الله بن سالم، والكتاب أتقن، فكيف إذا كان المخالف ضعيفاً، وقد حدث من حفظه؟!
لكن؛ جاءت متابعة لعمرو بن الحارث على ذلك ” عبد الرحمن بن جبير بن نفير ” في الإسناد.
فقد رواه: أبو التقي عبد الحميد بن إبراهيم، عن عبد الله بن سالم ـ بمثله.
أخرجه: الطبراني في ” الصغير (1/201) .
وقال الطبراني:
” لا يُروى هذا الحديث عن ابن معاوية إلا بهذا الإسناد، تفرد به الزبيدي، ولا نعرف لعبد الله بن معاوية الغاضري حديثاً مسنداً غير هذا “.
وهذه المتابعة لا تنفع؛ لأمرين:
الأول: أن أبا التقي هذا ضعيف جداً.
الثاني: أنها راجعة إلى رواية ابن زبريق فقد ذكر الأئمة أن تلك الأحاديث التي يرويها أبو التقي عن عبد الله بن سالم، إنما أخذها من كتاب ابن زبريق، وأنه لُقن إياها، ولم يكن يحفظ.
قال أبو حاتم الرازي:
” كان في بعض قرى حمص، لم أخرج إليه، وكان ذكر أنه سمع كتب عبد الله بن سالم الزبيدي، إلا أنها ذهبت كتبه، فقال: لا أحفظها، فأرادوا أن يعرضوا عليه، فقال: لا أحفظ، فلم يزالوا به حتى لان، ثم قدمتُ حمص بعد ذلك بأكثر من ثلاثين سنة، فإذا القوم يروون عنه هذا الكتاب، وقالوا: عُرض عليه كتاب ابن زبريق ولقنوه، فحدثهم بهذا، وليس هذا
عندي بشيء؛ رجل لا يحفظ، وليس عند كتاب!! “.
حكاه: ابن أبي حاتم عن أبيه في ” الجرح والتعديل ” (1) ، وحكى أيضاً نحوه عن محمد بن عوف الحمصي.
فهذا؛ يدل على أن متابعة أبي التقي راجعة إلى رواية ابن زبريق، فلا متابعة، وابن زبريق قد عرفت حاله وحال روايته.
وبهذا؛ لا يعتمد على الرواية الزائدة…


இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1582 , அல்முஃஜமுஸ் ஸகீர்-555 , குப்ரா பைஹகீ-7275 ,


ஆய்வுக்காக: ஜகாத் ஆய்வு .


ஜகாத் ஆய்வு செய்தி-2.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-641 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.