ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையிலேயே மரணிப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
(நஸாயி: 1829)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا كَهْمَسٌ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«الْمُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1829.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் புரைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- கஹ்மஸ் பின் ஹஸன் —> அப்துல்லாஹ் பின் புரைதா —> புரைதா (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-1829 ,
- கதாதா —> அப்துல்லாஹ் பின் புரைதா —> புரைதா (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-, இப்னு மாஜா-1452 , திர்மிதீ-982 , முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-1828 , இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-,
…
அஸ்ஸலாமு அலைக்கும்
பாத்திமா (ரழி ) அவர்கள் கூறினார்கள் ஆண்களைப் பார்க்காத . ஆண்களால் பார்க்கப்படாத பெண்களே
சிறந்த பெண்கள்
நூல் : அஹ்காம் / 219
இதன் தரம்?
அஸ்ஸலாமு அலைக்கும்.
அஹ்காம் / 219 என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த நூலின் ஆசிரியர் யார்?
வ அலைக்கும் ஸலாம்
எனக்கு தெரியவில்லை சகோ
தெரிந்து கொள்ளவே இங்கு பதிவிட்டுள்ளேன்.
இணையத்தில் தேடி பார்த்தேன்.இந்த நூலின் ஆசிரியர் பெயர் கிடைத்தது.
Ibn al-Jawzi, Abu al-Faraj ‘Abd al-Rahman ibn ‘Ali.
அஸ்ஸலாமு அலைக்கும்.
أحكام النساء لابن الجوزي (ص: 76)
عن سعيد بن المسيَّب أن علي بن أبي طالب عليه السلام قال لفاطمة عليها السلام: ما خير النساء؟ قالت: أن لا ترى الرجال، ولا يرونهن. فقال علي: فذكرتُ ذلك للنبي صلى الله عليه وسلّم فقال: «إنما فاطمة بضعة مني».
இது பலவீனமான செய்தி-அள்ளயீஃபா-5743
Jazhakallah Khair