தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1174

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த உலகில் ஒரு பெண் தனது கணவனுக்கு திட்டுவதின் மூலம் தொல்லைக் கொடுத்தால், ஹூருல் ஈன் எனும் அவருடைய சொர்க்கத்து மனைவியானவர், “அவ்வாறு அவரைத் திட்டாதே! அல்லாஹ் உன்னைக்  கொல்வானாக! அவர் உன்னிடம் உள்ள தற்காலிக விருந்தாளி ஆவார். பிறகு உன்னைவிட்டு பிரிந்து எங்களிடம் வரவிருக்கிறார்” என்று கூறுவார்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும். இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே இதை நாம் அறிகிறோம்.

இஸ்மாயீல் பின் அய்யாஷ் அவர்கள் ஷாம் வாசிகளிடமிருந்து அறிவிப்பவை மிகவும் ஏற்கத்தக்கவையாகும். ஹிஜாஸ்வாசிகள், மதீனாவாசிகளிடமிருந்து இவர் அறவிக்கும் செய்திகளில் மறுக்கப்படவேண்டிய செய்திகள் உள்ளன.

(திர்மிதி: 1174)

بَابٌ

حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَرَفَةَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ الحَضْرَمِيِّ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

لَا تُؤْذِي امْرَأَةٌ زَوْجَهَا فِي الدُّنْيَا، إِلَّا قَالَتْ زَوْجَتُهُ مِنَ الحُورِ العِينِ: لَا تُؤْذِيهِ، قَاتَلَكِ اللَّهُ، فَإِنَّمَا هُوَ عِنْدَكَ دَخِيلٌ يُوشِكُ أَنْ يُفَارِقَكِ إِلَيْنَا

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»، «وَرِوَايَةُ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ عَنِ الشَّامِيِّينَ أَصْلَحُ، وَلَهُ عَنْ أَهْلِ الحِجَازِ وَأَهْلِ العِرَاقِ مَنَاكِيرُ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1174.
Tirmidhi-Alamiah-1094.
Tirmidhi-JawamiulKalim-1090.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . ஹஸன் பின் அரஃபா

3 . இஸ்மாயீல் பின் அய்யாஷ்

4 . பஹீர் பின் ஸஃத்

5 . காலித் பின் மஃதான்

6 . கஸீர் பின் முர்ரா

7 . முஆத் பின் ஜபல் (ரலி)


  • 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-12141-ஹஸன் பின் அரஃபா அவர்களை சிலர் பலமானவர் என்றும்; வேறுசிலர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث எனும் தரத்திலும் கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/402, தக்ரீபுத் தஹ்தீப்-1/239)

  • 2 . மேலும் இதில் வரும் ராவீ-7845-இஸ்மாயீல் பின் அய்யாஷ் அவர்கள் ஷாம் வாசிகளிடமிருந்து அறிவித்தால் மட்டுமே சரியானதாகும் என்று அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளதை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/142)

இந்தச் செய்தியில் இடம்பெறும் இவரின் ஆசிரியரான பஹீர் பின் ஸஃத் அவர்கள் ஷாம் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.

இந்தச் செய்தி இஸ்மாயீல் பின் அய்யாஷ் அவர்கள் வழியாகவே வந்துள்ளது. இவர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதால் இது ஹஸன் தர செய்தியாகும்.


سلسلة الفوائد الحديثية والفقهية (11/ 210):
‌‌منزلة الزوج
قال تعالى: {الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ} [النساء: 34].
قال الإمام أحمد في «مسنده» رقم (22101): حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «لَا تُؤْذِي امْرَأَةٌ زَوْجَهَا فِي الدُّنْيَا إِلَّا قَالَتْ زَوْجَتُهُ مِنَ الْحُورِ الْعِينِ: لَا تُؤْذِيهِ قَاتَلَكِ اللَّهُ؛ فَإِنَّمَا هُوَ عِنْدَكِ دَخِيلٌ، يُوشِكُ أَنْ يُفَارِقَكِ إِلَيْنَا».
وتابع إبراهيمَ بن مهدي جماعةٌ: الحسن بن عرفة وعبد الوهاب بن الضحاك وداود بن عمرو وعيسى بن المنذر. ووَهَّم أبو زرعة متابعة بقية لإسماعيل بن عياش، كما في «العلل» لابن أبي حاتم (1264).
الخلاصة: كَتَب شيخنا مع الباحث أبي حمزة السويسي، بتاريخ (19) محرم (1444 هـ) الموافق (17/ 8/ 2022 م): معلول.


علل الحديث لابن أبي حاتم ط-أخرى (1/ 420)
1264- وسمِعتُ أبا زُرعة ، وذكر الحدِيث الّذِي رواهُ نُعيمُ بنُ حمّادٍ ، عن بقِيّة ، عن بحِيرِ بنِ سعدٍ ، عن خالِدِ بنِ معدان ، عن كثِيرِ بنِ مُرّة الحضرمِيِّ ، عن مُعاذِ بنِ جبلٍ ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم ، قال : لاَ تُؤذِي امرأةٌ زوجها فِي الدُّنيا ، إِلاَّ قالت زوجتُهُ مِن الحُورِ العِينِ : لاَ تُؤذِينه ، قاتلكِ اللَّهُ ، فإِنّما هُو عِندكِ دخِيلٌ عسى أن يُفارِقكِ.
قال أبُو زُرعة : ما أدرِي مِن أين جاء بِهِ نُعيمٌ أراهُ شُبِّه على نُعيمٍ ، لم يروِ هذا الحدِيث عن بحِيرِ غيرُ إِسماعِيل بنِ عيّاشٍ ، إِلاَّ أن يكُون بقِيّةُ ، عن إِسماعِيل بنِ عيّاشٍ.
وذكر أبُو زُرعة : أنَّ هذا الحدِيث ليس عِندهُم بِحِمص فِي كُتُبِ بقِيّة.

இந்தச் செய்தியை பகிய்யது பின் வலீதும் பஹீர் பின் ஸஃத் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். இதில் இல்லத்-குறை உள்ளது என்று முஸ்தஃபா அல்அதவீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதாவது இஸ்மாயீல் பின் அய்யாஷ் போன்று பகிய்யது பின் வலீதும் அறிவித்துள்ளார் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் பகிய்யது பின் வலீதின் செய்தியை தவறு என்று அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார். பகிய்யாவின் நூலில் இந்தச் செய்தி இல்லை. எனவே பகிய்யது பின் வலீத் அவர்களின் செய்தி முதாபஅத் ஆகாது.

அல்லது பகிய்யது இந்தச் செய்தியை அறிவிக்கும்போது தத்லீஸ் செய்து அதாவது இஸ்மாயீல் பின் அய்யாஷ் அவர்களை விட்டுவிட்டு அறிவித்திருக்கலாம் என்று அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளதை முஸ்தஃபா அல்அதவீ குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: ஸில்ஸிலதுல் ஃபவாயிதில் ஹதீஸிய்யதி வல்ஃபிக்ஹிய்யா-11/210, இலலுல் ஹதீஸ்-1264)


(பகிய்யாவின் அறிவிப்பில் தான் தவறு உள்ளது. இதை அறிவிக்கும் நுஐம் பின் ஹம்மாத் அவர்கள் தவறாக விளங்கிவிட்டார் என்றே அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார். இஸ்மாயீல் பின் அய்யாஷ் அவர்களின் செய்தியில் விமர்சனம் இல்லை)

இஸ்மாயீல் பின் அய்யாஷ் தத்லீஸ் செய்பவர் என்று சிலர் கூறியுள்ளனர். இதற்கு சரியான ஆதாரம் இல்லை.

(தகவல்: தத்லீஸு இஸ்மாயீல் பின் அய்யாஷ்)


1 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-22101 , இப்னு மாஜா-2014 , திர்மிதீ-1174 , அல்முஃஜமுல் கபீர்-224  , …


கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.