நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த உலகில் ஒரு பெண் தனது கணவனுக்கு திட்டுவதின் மூலம் தொல்லைக் கொடுத்தால், ஹூருல் ஈன் எனும் அவருடைய சொர்க்கத்து மனைவியானவர், “அவ்வாறு அவரைத் திட்டாதே! அல்லாஹ் உன்னைக் கொல்வானாக! அவர் உன்னிடம் உள்ள தற்காலிக விருந்தாளி ஆவார். பிறகு உன்னைவிட்டு பிரிந்து எங்களிடம் வரவிருக்கிறார்” என்று கூறுவார்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 22101)حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
لَا تُؤْذِي امْرَأَةٌ زَوْجَهَا فِي الدُّنْيَا إِلَّا قَالَتْ زَوْجَتُهُ مِنَ الْحُورِ الْعِينِ: لَا تُؤْذِيهِ قَاتَلَكِ اللَّهُ؛ فَإِنَّمَا هُوَ عِنْدَكِ دَخِيلٌ يُوشِكُ أَنْ يُفَارِقَكِ إِلَيْنَا
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22101.
Musnad-Ahmad-Alamiah-21085.
Musnad-Ahmad-JawamiulKalim-21528.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . இப்ராஹீம் பின் மஹ்தீ
3 . இஸ்மாயீல் பின் அய்யாஷ்
4 . பஹீர் பின் ஸஃத்
5 . காலித் பின் மஃதான்
6 . கஸீர் பின் முர்ரா
7 . முஆத் பின் ஜபல் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1203-இப்ராஹீம் பின் மஹ்தீ என்பவர் பற்றி இவர் பொய்யரல்ல என்று நான் கருதுகிறேன். என்றாலும் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் கூறியுள்ளார். - அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள் இவர் வழியாக எங்களுக்கு ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம் கூறியுள்ளார். - அபூஹாதிம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அப்துல்பாகீ-இப்னு கானிஃ ஆகியோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர். - கதீப் பஃக்தாதீ அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-2/214, அல்இக்மால்-1/297, தஹ்தீபுத் தஹ்தீப்-1/88, தக்ரீபுத் தஹ்தீப்-1/116)
இவர் இந்தச் செய்தியை தனித்து அறிவிக்கவில்லை என்பதால் இது ஹஸன் தரமாகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-1174 .
சமீப விமர்சனங்கள்