தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-4396

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூஸஃலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதிப்பும் மாண்புமிக்க அல்லாஹ், சிலவற்றை கட்டாய கடமையாக விதித்துள்ளான். அவற்றை (செய்யாமல்) வீணாக்கிவிடாதீர்கள். அவன் நமக்கு சிலவற்றை தடை செய்துள்ளான். அவற்றை செய்து விடாதீர்கள்.

அவன் சிலவற்றில் நமக்கு வரம்புகளை விதித்துள்ளான். அவைகளை மீறிவிடாதீர்கள். சிலவற்றை அவன் கூறாமல் விட்டுவிட்டான். இது அவன் மறந்து விட்டதால் அல்ல. (அவன் நம்மீது கொண்ட கொண்ட அன்பினால் ஆகும்). எனவே அவைகளைக் குறித்து வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் வாசக அமைப்பு யஃகூப் பின் இப்ராஹீம் அவர்கள் அறிவித்ததாகும்.

(daraqutni-4396: 4396)

نا الْقَاسِمُ بْنُ إِسْمَاعِيلَ الْمَحَامِلِيُّ , نا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ , وَمُحَمَّدُ بْنُ حَسَّانَ الْأَزْرَقُ ,
قَالَا: ثنا إِسْحَاقُ الْأَزْرَقُ , نا دَاوُدُ بْنُ أَبِي هِنْدَ , عَنْ مَكْحُولٍ , عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ فَرَضَ فَرَائِضَ فَلَا تُضَيِّعُوهَا , وَحَرَّمَ حُرُمَاتٍ فَلَا تَنْتَهِكُوهَا , وَحَّدَ حُدُودًا فَلَا تَعْتَدُوهَا , وَسَكَتَ عَنْ أَشْيَاءَ مِنْ غَيْرِ نِسْيَانٍ فَلَا تَبْحَثُوا عَنْهَا».

لَفْظُ يَعْقُوبَ


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-4396.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-3861.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம்

2 . காஸிம் பின் இஸ்மாயீல்

3 . யஃகூப் பின் இப்ராஹீம், 4 . முஹம்மத் பின் ஹஸ்ஸான்.

5 . இஸ்ஹாக் அஸ்ரக்

6 . தாவூத் பின் அபூஹிந்த்

7 . மக்ஹூல் பின் அபூமுஸ்லிம்

8 . அபூஸஃலபா அல்குஷனீ (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45233-மக்ஹூல் அவர்கள் நபித்தோழர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளாரா? என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது.
  • சிலர் இவர் எந்த நபித்தோழரிடமும் ஹதீஸைக் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.
  • சிலர் குறைந்த பட்சம் அனஸ் (ரலி), வாஸிலா பின் அஸ்கஃ (ரலி), அபூஹின்த் அத்தாரீ (ரலி) ஆகியோரிடம் மட்டுமே கேட்டுள்ளார் என்று கூறியுள்ளனர்…

(நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/515)

சமகாலத்தில் வாழ்ந்தவர், தனது ஆசிரியரை சந்திப்பதற்கு வாய்ப்பு இருந்தால் போதும்; அவரின் அன்அனா செய்திகளை ஏற்கலாம் என்பவர்கள் இதை சரி என்று கூறியுள்ளனர்.

தனது ஆசிரியரை சந்தித்ததற்கு அடையாளமாக குறைந்த பட்சம் ஒரு செய்தியிலாவது ஸிமாஃ இருக்கவேண்டும் என்பவர்கள் இந்தச் செய்தியை முர்ஸல் என்று அதாவது முன்கதிஃ என்று கூறியுள்ளனர்.

இந்தச் செய்தியின் கருத்து சரியானதுதான் என்றாலும் இதன் அறிவிப்பாளர்தொடர்களில் விமர்சனம் உள்ளது.


அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-30.


1 . இந்தக் கருத்தில் அபூஸஃலபா அல்குஷனீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …தாரகுத்னீ-4396 ,


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.