பாடம்: 26
பயன்பாடுகளில் தீர்ப்பளித்தல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவர் மற்றவருக்கு) தீங்கிழைக்கவும் கூடாது. (பழிக்குப் பழி வாங்குவதில்) அதிகமாக தீங்கிழைக்கவும் கூடாது.
அறிவிப்பவர்: யஹ்யா பின் உமாரா (ரஹ்)
(முஅத்தா மாலிக்: 2171)26 – الْقَضَاءُ فِي الْمِرْفَقِ.
حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَن عَمْرِو بْنِ يَحيَى الْمَازِنِيِّ، عَن أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ:
لاَ ضَرَرَ وَلاَ ضِرَارَ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2171.
Muwatta-Malik-Alamiah-1234.
Muwatta-Malik-JawamiulKalim-1406.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . யஹ்யா பின் யஹ்யா அல்லைஸீ
2 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம்
3 . அம்ர் பின் யஹ்யா
4 . யஹ்யா பின் உமாரா (ரஹ்)
5 . நபி (ஸல்)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48494-யஹ்யா பின் உமாரா (ரஹ்) அவர்கள் தாபிஈ ; பலமானவர் ஆவார். இவரை யாரும் நபித்தோழர் என்றுக் குறிப்பிடவில்லை.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/379, தக்ரீபுத் தஹ்தீப்-1/1063)
எனவே இது முர்ஸலான செய்தியாகும்.
2 . இந்தக் கருத்தில் யஹ்யா பின் உமாரா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
- அம்ர் பின் யஹ்யா —> யஹ்யா பின் உமாரா (ரஹ்) —> நபி (ஸல்)
பார்க்க: மாலிக்-2171 , குப்ரா பைஹகீ-,
மேலும் பார்க்க: தாரகுத்னீ-3079 .
சமீப விமர்சனங்கள்