தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2012

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிதானமாக செயல்படுவது அல்லாஹ்வின் பண்பாகும். அவசரமாக செயல்படுவது ஷைத்தானின் பண்பாகும்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அப்துல்முஹைமின் பின் அப்பாஸ் பின் ஸஹ்ல் என்பவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்ற காரணத்தால் சில அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இதற்கு முன்புள்ள செய்தியில் இடம்பெறும் அஷஜ் அப்துல்கைஸ் (ரலி) அவர்களின் இயற்பெயர் முன்திர் பின் ஆஇத் (ரலி) என்பதாகும்.

(திர்மிதி: 2012)

حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ المَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ المُهَيْمِنِ بْنُ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الأَنَاةُ مِنَ اللَّهِ وَالعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ»

هَذَا حَدِيثٌ غَرِيبٌ. وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي عَبْدِ المُهَيْمِنِ بْنِ عَبَّاسِ بْنِ سَهْلٍ وَضَعَّفَهُ مِنْ قِبَلِ حِفْظِهِ. وَالْأَشَجُّ اسْمُهُ الْمُنْذِرُ بْنُ عَائِذٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2012.
Tirmidhi-Alamiah-1935.
Tirmidhi-JawamiulKalim-1931.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . அபூமுஸ்அப்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அபூபக்ர்

3 . அப்துல்முஹைமின் பின் அப்பாஸ்

4 . அப்பாஸ் பின் ஸஹ்ல்

5 . ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26723-அப்துல்முஹைமின் பின் அப்பாஸ் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


2 . இந்தக் கருத்தில் ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2012, அல்முஃஜமுல் கபீர்-, …


மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-4256.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.