பாடம்:
யாசிப்பவரின் உரிமைக் குறித்து வந்துள்ளவை.
அப்துர்ரஹ்மான் பின் புஜைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தவர்களில் ஒருவரான எனது பாட்டி உம்மு புஜைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) நான், அல்லாஹ்வின் தூதரே! சில நேரம் எனது வாசலில் ஒரு ஏழை நிற்கும்போது அவருக்கு கொடுப்பதற்கேற்ற எதுவும் என்னிடம் இருப்பதில்லையே என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், அப்போது உம்மிடம் எதுவும் இல்லாவிட்டால் (குறைந்த பட்சம்) கால்நடைப் பிராணிகளின் கரிந்த குளம்பே இருந்தாலும் அதை அவரின் கையில் கொடுத்துவிடு! என்று கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி அலீ (ரலி), ஹுஸைன் பின் அலீ (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உம்மு புஜைத் (ரலி) அவர்களின் (மேற்கண்ட) செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
(திர்மிதி: 665)بَابُ مَا جَاءَ فِي حَقِّ السَّائِلِ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بُجَيْدٍ، عَنْ جَدَّتِهِ أُمِّ بُجَيْدٍ، وَكَانَتْ مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ:
يَا رَسُولَ اللَّهِ، إِنَّ المِسْكِينَ لَيَقُومُ عَلَى بَابِي فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ لَمْ تَجِدِي لَهُ شَيْئًا تُعْطِيهِ إِيَّاهُ إِلَّا ظِلْفًا مُحْرَقًا فَادْفَعِيهِ إِلَيْهِ فِي يَدِهِ»
وَفِي البَابِ عَنْ عَلِيٍّ، وَحُسَيْنِ بْنِ عَلِيٍّ، وَأَبِي هُرَيْرَةَ، وَأَبِي أُمَامَةَ.: «حَدِيثُ أُمِّ بُجَيْدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-665.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . குதைபா பின் ஸயீத்
3 . லைஸ் பின் ஸஃத்
4 . ஸயீத் பின் கைஸான் (ஸயீத் பின் அபூஸயீத்)
5 . அப்துர்ரஹ்மான் பின் புஜைத்
6 . உம்மு புஜைத் (ரலி)
மேலும் பார்க்க: அபூதாவூத்-1667.
சமீப விமர்சனங்கள்