தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1667

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அப்துர்ரஹ்மான் பின் புஜைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தவர்களில் ஒருவரான எனது பாட்டி உம்மு புஜைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) நான், அல்லாஹ்வின் தூதரே! ஸல்லல்லாஹு அலைக (அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!) சில நேரம் எனது வாசலில் ஒரு ஏழை நிற்கும்போது அவருக்கு கொடுப்பதற்கேற்ற எதுவும் என்னிடம் இருப்பதில்லையே என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அப்போது உம்மிடம் எதுவும் இல்லாவிட்டால் (குறைந்த பட்சம்) கால்நடைப் பிராணிகளின் கரிந்த கால்குளம்பே இருந்தாலும் அதை அவரின் கையில் கொடுத்துவிடு! என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 1667)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بُجَيْدٍ، عَنْ جَدَّتِهِ أُمِّ بُجَيْدٍ،

وَكَانَتْ مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ لَهُ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْكَ، الْمِسْكِينَ لَيَقُومُ عَلَى بَابِي، فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ لَمْ تَجِدِي لَهُ شَيْئًا تُعْطِينَهُ إِيَّاهُ إِلَّا ظِلْفًا مُحْرَقًا، فَادْفَعِيهِ إِلَيْهِ فِي يَدِهِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1667.
Abu-Dawood-Alamiah-1419.
Abu-Dawood-JawamiulKalim-1421.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . குதைபா பின் ஸயீத்

3 . லைஸ் பின் ஸஃத்

4 . ஸயீத் பின் கைஸான் (ஸயீத் பின் அபூஸயீத்)

5 . அப்துர்ரஹ்மான் பின் புஜைத்

6 . உம்மு புஜைத் (ரலி)


இந்தச் செய்தி பலவகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இதன் கருத்தை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (15/ 425)
4119- وسئل عن حديث عبد الرحمن بن بجيد، عن جدته، قيل: يا رسول الله! إن المسكين ليقوم ببابي لا أجد شيئا أعطيه إياه، فقال صلى الله عليه وسلم: إن لم تجدي إلا ظلف شاة محرق، فابعثي إليه في يده، ثم قال: يا نساء المسلمات لاتحقرن جارة لجارتها، ولو فرسن شاة.


فَقَالَ: يَرْوِيهِ سَعِيدٌ الْمَقْبُرِيُّ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ عبد الحميد بن جعفر، عن سعيد المقبري، عن عبد الرحمن بن بجيد، عن جدته أم بجيد.
وتابعه محمد بن إسحاق، عن سعيد، قال ذلك عنه: حماد بن سلمة.
وخالفه حماد بن زيد: رواه عن: ابن إسحاق، عن عبد الرحمن بن بجيد لم يذكر فيه سعيد المقبري، ولعله سقط على بعض الرواة.


ورواه ابن عَجْلَانَ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ ابْنُ عُيَيْنَةَ، عَنِ ابن عجلان، عن سعيد المقبري، مُرْسَلًا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
ورواه يونس بن عبيد، عن محمد، ولم ينسبه، قيل: هو ابن عَجْلَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ولا يصح عن أبي هريرة.


ورواه الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ، عَنْ عبد الرحمن بن بجيد، عن جدته نحوا من قول المقبري.


وَرَوَاهُ زَيْدُ بْنُ أَسْلَمَ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ: هشام بن سعد، وَحَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عن ابن بجيد، عن جدته.

وخالفه مالك بن أنس، واختلف عنه.
فقال القعنبي: عن مالك، عن زيد، عن عمرو بن معاذ، عن جدته.
وقال محمد بن الحسن: عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ معاذ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ، عَنْ جدته، ولفظهما، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تحقرن إحداكن لجارتها، ولو كراع شاة عرق فقط.


وروى مالك، عن زيد بن أسلم، عن ابن بجيد، عن جدته، عن النبي صلى الله عليه وسلم: لاتردوا السائل، ولو بظلف محرق.
وخالفه حفص بن ميسرة، وهشام بن سعد، قالا: عن زيد بن أسلم بهذا الإسناد: لا تحقرن … فقط.


وقال حفص بن ميسرة، وهشام بن سعد، عن زيد بن أسلم، عن عمرو بن معاذ، عن جدته، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تردوا السائل، ولو بظلف محرق.


وروى هذا الحديث منصور بن حيان، فقال: عن ابن بجاد، عن جدته، قال رسول الله صلى الله عليه وسلم: ردوا السائل، ولو بظلف شاة.

இந்தச் செய்தியின் பலவகையான அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவற்றில் எது மிகச் சரியானது என்பதைக் குறிப்பிடவில்லை.

(நூல்: அல்இலலுல் வாரிதா-4119)


மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அறிவிக்கும், ஸைத் பின் அஸ்லம் —> அப்துர்ரஹ்மான் பின் புஜைத் —> உம்மு புஜைத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரையே புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் சரியானது என்று கூறியுள்ளார்.

…..


அதிகமானோர் அப்துர்ரஹ்மான் பின் புஜைத் அவர்கள் வழியாகவே இந்தச் செய்தியை சில வார்த்தை மாற்றத்துடன் கருத்தை அறிவித்துள்ளனர்.


ஸைத் பின் அஸ்லம் அவர்களின் அறிவிப்புகள்:

ஸயீத் அல்மக்புரீ அவர்களின் அறிவிப்புகள்:

 


1 . இந்தக் கருத்தில் உம்மு புஜைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துர்ரஹ்மான் பின் புஜைத் —> உம்மு புஜைத் (ரலி)

பார்க்க: மாலிக்-2673, முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, அபூதாவூத்-1667, திர்மிதீ-665, குப்ரா நஸாயீ-, நஸாயீ-2565, இப்னு குஸைமா-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-6017,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.