அம்ர் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை எதிர்ப்பார்த்து அவரின் வீட்டுவாசலில் நாங்கள் அமர்ந்திருந்தோம். பிறகு அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தியை எங்களுக்கு அறிவித்தார்கள். அது என்னவெனில்,
“ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் எத்தகைய வர்களாயிருப்பார்கள் என்றால், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்களில் அனைவரும் அப்படி இருப்பார்கள் என்பதை நான் அறியமாட்டேன். ஆனால் அவர்களில் அதிகமானோர் அப்படி இருப்பார்கள்.”
அம்ர் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் மேலும் கூறினார்:
அலீ (ரலி) அவர்களுக்கும், காரிஜிய்யா கூட்டத்தைச் சார்ந்தவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது நஹ்ரவான் எனும் இடத்தில் இதுபோன்ற தன்மையுடையவர்களில் அதிகமானோர் காரிஜிய்யா கூட்டத்துடன் சேர்ந்துக் கொண்டு எங்களுடன் விவாதித்ததை நான் பார்த்தேன்.
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 37890)حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ عَمْرِو بْنِ سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ:
كُنَّا جُلُوسًا عِنْدَ بَابِ عَبْدِ اللَّهِ نَنْتَظِرُ أَنْ يَخْرُجَ إِلَيْنَا فَخَرَجَ , فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا أَنَّ قَوْمًا يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ , يَمْرُقُونَ مِنَ الْإِسْلَامِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ , وَايْمُ اللَّهِ لَا أَدْرِي لَعَلَّ أَكْثَرَهُمْ مِنْكُمْ ,
قَالَ: فَقَالَ عَمْرُو بْنُ سَلَمَةَ: فَرَأَيْنَا عَامَّةَ أُولَئِكَ يُطَاعِنُونَا يَوْمَ النَّهْرَوَانِ مَعَ الْخَوَارِجِ
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-37890.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு அபூஷைபா
2 . அம்ர் பின் யஹ்யா
3 . யஹ்யா பின் அம்ர் பின் ஸலமா
4 . அம்ர் பின் ஸலமா
5 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
மேலும் பார்க்க: தாரிமீ-210.
சமீப விமர்சனங்கள்