ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறை நம்பிக்கையாளரின் ஆத்மா அவர் வாங்கிய கடன் காரணத்தினால் அவர் சார்பில் அது நிறைவேற்றப்படுகின்ற வரை (அந்தரத்தில்) தொங்கவிடப்படுகிறது.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
(திர்மிதி: 1078)بَابُ مَا جَاءَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «نَفْسُ المُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ»
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«نَفْسُ المُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-998.
Tirmidhi-Shamila-1078.
Tirmidhi-Alamiah-998.
Tirmidhi-JawamiulKalim-.
👇 கீழ் உள்ளதற்கு அர்த்தம் சரியாக உள்ளதா❓
இந்த ஹதீஸ் இத்தளத்தில் இன்னும் ஏற்படவில்லை என்று நினைக்கிறேன்❗
1.உங்கள் தோழர் ஒருவர் தன்மீது இருக்கும் கடனை (தீர்து வைக்கப்படாததால்) சொர்க்கத்தின் வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். நீங்கள் விரும்பினால் அவரது கடனைத் தீர்க்கும் பொருட்டு (அவருக்காக) பரிகாரம் செய்யுங்கள். இல்லையெனில், அவரை அல்லாஹ்வின் வேதனைக்கு (பொறுங்கடனாளியாக) ஒப்படைத்துவிடுங்கள்.
إنَّ صاحبَكم حُبِسَ على بابِ الجنَّةِ بدينٍ كانَ عليْهِ فإن شئتُم فافدوهُ وإن شئتُم فأسلِموهُ إلى عذابِ اللَّهِ
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
2.சஅத் பின் அல்அத்வல் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் சகோதரர் இறந்துவிட்டார். அவர் **300 திர்ஹம்கள்** (வெள்ளி நாணயங்கள்) மற்றும் குடும்பத்தினரை விட்டுச் சென்றார். நான் அந்தப் பணத்தை அவரது குடும்பத்தினருக்காக செலவிட நினைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், *’உங்கள் சகோதரர் தன்மீது இருக்கும் கடனால் (சொர்க்கத்தில்) தடுக்கப்பட்டுள்ளார். எனவே, அவரது கடனைத் தீர்க்கவும்’* என்று கூறினார்கள். நான், *’அல்லாஹ்வின் தூதரே! அவரது கடனை நான் தீர்த்துவிட்டேன். ஆனால், ஒரு பெண் இரண்டு தினார்கள் (தங்க நாணயங்கள்) கேட்கிறாள். அவளுக்கு ஆதாரம் இல்லை’* என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், *’அவளுக்கு (அந்தப் பணத்தைக்) கொடுத்துவிடுங்கள். நிச்சயமாக அவள் உண்மையே கூறுகிறாள்’* என்று சொன்னார்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
3.أبو سعيد الخدري
கடனாளி தனது கடன் தீர்க்கப்படும் வரை தனது கல்லறையில் கட்டுண்ட நிலையில் இருக்கிறான்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
அபூ ஹுரைரா வார்த்தை வித்யாசத்துடனும் அறிவித்துள்ளார்
لا تَزالُ نَفْسُ ابنِ آدمَ مُعَلَّقةً بدَيْنِهِ حتى يُقضى عنهُ
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
سمرة بن جندب
سعد بن الأطول
போன்ற ராவிகள் மூலமாக இந்த ஹதீஸ் வந்துள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும்.
பயான் சைட்டில் உள்ள மேற்கண்ட செய்தியை பதிவு மட்டும் செய்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் பிறகு இந்த செய்தியின் தக்ரீஜ், தரம் பதிவு செய்வோம்.