“கழுதை, இறைமறுப்பாளர், நாய், பெண் ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் ஒரு முஸ்லிமின் தொழுகையை (கவனச் சிதறலால்) முறிப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களை தீய விலங்குகளுடன் (சமமாக) ஆக்கிவிட்டீர்களே!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ராஷித் பின் ஸஃத் (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 24546)حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ، قَالَ: حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعْدٍ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يَقْطَعُ صَلَاةَ الْمُسْلِمِ شَيْءٌ إِلَّا الْحِمَارُ، وَالْكَافِرُ، وَالْكَلْبُ، وَالْمَرْأَةُ» ، فَقَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللَّهِ، لَقَدْ قُرِنَّا بِدَوَابِّ سُوءٍ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-23407.
Musnad-Ahmad-Shamila-24546.
Musnad-Ahmad-Alamiah-23407.
Musnad-Ahmad-JawamiulKalim-23987.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்
2 . அப்துல்குத்தூஸ் பின் ஹஜ்ஜாஜ்-அபுல்முஃகீரா
3 . ஸஃப்வான் பின் அம்ர்-அபூஅம்ர்
4 . ராஷித் பின் ஸஃத்-அல்மக்ராஈ
5 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். பின்த் அபூபக்ர் (ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15506-ராஷித் பின் ஸஃத் அவர்கள் பலமானவர் தான் என்றாலும் இவர் இந்தச் செய்தியை ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை. இவர் அதிகம் முர்ஸலாக அதாவது ஸிமாஃ இல்லாமல் அன்அனாவாக- عن எனும் வார்த்தையைக் கூறி அறிவிப்பவர் என்ற விமர்சனம் உள்ளது.
மேலும் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் இந்தக் கருத்துக்கு மாற்றமாக அறிவித்துள்ளனர்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-882, புகாரி-514,
சமீப விமர்சனங்கள்