தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-174

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை, எந்தவொரு தொழுகையையும் அதன் கடைசி நேரத்தில் இரண்டு முறை தொழுததில்லை.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் ‘கரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடர் ‘முத்தஸில்-சங்கிலித் தொடராக’ இல்லை.

ஷாபிஈ இமாம் கூறுகிறார்:

தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதே மிகவும் சிறந்ததாகும். இறுதி நேரத்தை விட ஆரம்ப நேரம் சிறந்தது என்பதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் நடைமுறை உள்ளது. அவர்கள் மிகச் சிறந்ததைத் தவிர வேறெதையும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்; சிறப்பானதை விட்டுவிடவும் மாட்டார்கள். அவர்கள் ஆரம்ப நேரத்திலேயே தொழுது வந்தனர்.

இந்த தகவலை அபுல்வலீத் அல்மக்கீ அவர்கள் ஷாபிஈ இமாமிடமிருந்து எங்களுக்கு அறிவித்தார்.

(திர்மிதி: 174)

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عُمَرَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

«مَا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةً لِوَقْتِهَا الآخِرِ مَرَّتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ»،

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ» قَالَ الشَّافِعِيُّ: «وَالوَقْتُ الأَوَّلُ مِنَ الصَّلَاةِ أَفْضَلُ، وَمِمَّا يَدُلُّ عَلَى فَضْلِ أَوَّلِ الوَقْتِ عَلَى آخِرِهِ اخْتِيَارُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، فَلَمْ يَكُونُوا يَخْتَارُونَ إِلَّا مَا هُوَ أَفْضَلُ، وَلَمْ يَكُونُوا يَدَعُونَ الفَضْلَ، وَكَانُوا يُصَلُّونَ فِي أَوَّلِ الوَقْتِ»، حَدَّثَنَا بِذَلِكَ أَبُو الوَلِيدِ المَكِّيُّ، عَنِ الشَّافِعِيِّ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-174.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.