தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3871

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி), அலீ (ரலி), பாத்திமா (ரலி) ஆகியோரை ஒரு போர்வையினால் மூடினார்கள். பிறகு, “யா அல்லாஹ்! இவர்கள் என் குடும்பத்தினர்; மற்றும் எனக்கு நெருக்கமானவர்கள். இவர்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, இவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நானும் அவர்களுடன் இருக்கிறேனா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக நீ நன்மையின் மீதே இருக்கிறாய்” என்று கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் இதுவே சிறந்தது. இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் உமர் பின் அபூஸலமா (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி), அபுல்ஹம்ரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

(திர்மிதி: 3871)

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زُبَيْدٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أُمِّ سَلَمَةَ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَّلَ عَلَى الحَسَنِ وَالحُسَيْنِ وَعَلِيٍّ وَفَاطِمَةَ كِسَاءً، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي وَخَاصَّتِي، أَذْهِبْ عَنْهُمُ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا»، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: وَأَنَا مَعَهُمْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِنَّكِ إِلَى خَيْرٍ»: “

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهُوَ أَحْسَنُ شَيْءٍ رُوِيَ فِي هَذَا البَابِ وَفِي البَابِ عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، وَأَنَسِ بْنِ مَالِكٍ، وَأَبِي الحَمْرَاءِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3871.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


 

 


மேலும் பார்க்க: அஹ்மத்-26508.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.