தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-20513-ஆமிர் பின் ஷராஹீல்-ஷஅபீ

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஆமிர் பின் ஷராஹீல்-அஷ்ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
– عامر بن شراحيل-الشعبي

இறப்பு: ஹி-103 அல்லது 104-109.

தரம்: பலமானவர்.


இயற்பெயர்: ஆமிர்

தந்தை பெயர்: ஷராஹீல்

வமிசம்: ஷஅபீ,பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
ஹிம்யரீ, கூஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅம்ர்

ஊர் பெயர்: கூஃபா

பயணம் செய்த ஊர்கள்: மதீனா, நைஸாபூர்.

பிறப்பு: ஹிஜ்ரி-19 அல்லது 20.

இறப்பு: ஹிஜ்ரி-103 அல்லது 104 முதல் 109 க்குள்.

கால கட்டம்: 3.


 

 

 


ஆமிர் அஷ்ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
அவர்கள் பிறந்த வருடம்

நான் ஜலூலா போர் நடைபெற்ற வருடம் (ஹிஜ்ரீ 16 இல்) பிறந்தேன் என்று கூறியதாக இப்னு உயைனா அறிவித்துள்ளார். என்றாலும் இதில் மிகப் பலவீனமானவரான ஸரிய்யு பின் இஸ்மாயீல் இடம்பெற்றுள்ளார் என்பதால் இது சரியான கருத்தல்ல.

ஹிஜ்ரீ 19, 20 , 21 , 31 இல் பிறந்தார் என்று வரலாற்று நூல்களில் பலவாறு கூறப்பட்டுள்ளது. இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
அவர்கள், உமர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட பிறகே இவர் பிறந்தார் என்று கூறியுள்ளார். இதன்படி இவர் ஹிஜ்ரீ 23 இல் பிறந்தார் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

அதிகமானோர் ஹிஜ்ரீ 19 என்று கூறியிருப்பதால் சிலர் இவரின் பிறப்பு ஹிஜ்ரீ 19 தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆமிர் அஷ்ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
அவர்கள் இறந்த வருடம்

இவர் ஹிஜ்ரீ 104 இல் இருந்து 110 க்குள் உள்ள வருடங்களை குறிப்பிட்டு இவற்றில் இறந்தார் என்று பலவாறு வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இவர் ஹிஜ்ரீ 103 அல்லது 104 இல், தனது 82 வது வயதில் இறந்தார் என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்கள்: தாரீகுல் இஸ்லாம்-3/70, அல்காஷிஃப்-3/59…)


ஆமிர் அவர்கள் கூஃபாவாசி ஆவார். இவர் மதீனாவிற்கு சென்றது ஹிஜ்ரீ 66 ல் தான். கூஃபாவின் ஆட்சியாளர் முக்தாரிடம் ஏற்பட்ட பிரச்சனையால் தான் ஆமிர் அவர்கள் மதீனாவிற்கு சென்றார். இது நடந்தது ஹிஜ்ரீ 66 அல்லது 65 தான். உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மரணித்த வருடம் பற்றி ஹிஜ்ரீ 59 அல்லது ஹிஜ்ரீ 61 அல்லது ஹிஜ்ரீ 62, 63 என்றும் வரலாற்றுத் தகவல் உள்ளது. இதன்படி ஆமிர் அஷ்ஷபீ அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்றும் முடிவு செய்யலாம்…

அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களிடம் சில செய்திகளை ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
கேட்டுள்ளார். சில செய்திகளை வேறு அறிவிப்பாளர் வழியாக கேட்டுள்ளார். அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு முன்பே மரணித்தவர் ஆவார். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சந்திப்பு, பயணம் நேரத்தில் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு பிறகு மரணித்த அபூஸயீத் (ரலி) அவர்களிடம் ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
அவர்கள் கேட்கவில்லை என்றிருக்கும்போது உம்மு ஸலமா (ரலி) அவர்களிடமும் கேட்கவில்லை என்று கருத்துக்கே சிலர் முன்னுரிமை தருகின்றனர்.


الثقات للعجلي ت البستوي (2/ 446):
2321 – الشّعبِيّ سمع من ثَمَانِيَة وَأَرْبَعين من أَصْحَاب النَّبِي صلى الله عليه وسلم وَالشعْبِيّ أكبر من أبي إِسْحَاق السبيعِي بِسنتَيْنِ وَأَبُو إِسْحَاق أكبر من عبد الْملك بن عُمَيْر بِسنتَيْنِ ثَنَا أَبُو مُسلم حَدثنِي أبي قَالَ مُرْسل الشّعبِيّ صَحِيح لَا يكَاد يُرْسل إِلَّا صَحِيحا أهل الْيمن أرق قوم حَدثنَا أَبُو مُسلم قَالَ سَمِعت أبي أَحْمد يَقُول سَمِعت أبي عبد الله يَقُول قَالَ الشّعبِيّ لِأَن أصلى وَأَنا جنب أحب إِلَيّ من أَن أُعِيد للشَّيْطَان وضُوءًا

ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
அவர்கள் 48 நபித்தோழர்களிடம் ஹதீஸ்களைக் கேட்டுள்ளார். இவரின் முர்ஸலான செய்திகளும் சரியானவைகளே என்று இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் கூறியுள்ளார்.

(நூல்: மஃரிஃபதுஸ் ஸிகாத்-அஸ்ஸிகாத்-இஜ்லீ-751 (2321, 2/446)

என்றாலும் வேறு சில அறிஞர்கள் இவரின் முர்ஸலான செய்திகளையும் பலவீனமானவை என்றே முடிவு செய்கின்றனர்.


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.