தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-261

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் தஸ்பீஹ் (இறைத் துதிச் சொற்களை) கூறுவது குறித்து வந்துள்ளவை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ருகூஉ செய்யும் போது, தனது ருகூஃவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ என்று மூன்று முறை கூறினால், அவரது ருகூஉ முழுமையடைந்து விடுகிறது. இதுவே அதன் குறைந்தபட்ச அளவாகும். அவர் ஸஜ்தாச் செய்யும் போது, தனது ஸஜ்தாவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ என்று மூன்று முறை கூறினால், அவரது ஸஜ்தா முழுமையடைந்து விடுகிறது. இதுவே அதன் குறைந்தபட்ச அளவாகும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஹுதைஃபா (ரலி), உக்பா பின் ஆமிர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் வழியாக வரும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் முத்தஸில் அல்ல. (இது முன்கதிஃ ஆகும்). ஏனெனில், அவ்ன் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை.

இருப்பினும், அறிஞர்களிடம் நடைமுறை இதன்படியே உள்ளது. ஒரு மனிதர் ருகூஉ, ஸஜ்தாவில் மூன்று தஸ்பீஹ்களை விடக் குறைப்பதைத் தவிர்க்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

இமாம் இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னால் தொழுபவர்கள் மூன்று தஸ்பீஹ்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, இமாம் ஐந்து தஸ்பீஹ்கள் சொல்வதை நான் விரும்புகிறேன். இவ்வாறே இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள்.

(திர்மிதி: 261)

بَابُ مَا جَاءَ فِي التَّسْبِيحِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ إِسْحَاقَ بْنِ يَزِيدَ الهُذَلِيِّ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ ابْنِ مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

” إِذَا رَكَعَ أَحَدُكُمْ، فَقَالَ فِي رُكُوعِهِ: سُبْحَانَ رَبِّيَ العَظِيمِ ثَلَاثَ مَرَّاتٍ، فَقَدْ تَمَّ رُكُوعُهُ، وَذَلِكَ أَدْنَاهُ، وَإِذَا سَجَدَ، فَقَالَ فِي سُجُودِهِ: سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى ثَلَاثَ مَرَّاتٍ، فَقَدْ تَمَّ سُجُودُهُ، وَذَلِكَ أَدْنَاهُ “.

وَفِي البَابِ عَنْ حُذَيْفَةَ، وَعُقْبَةَ بْنِ عَامِرٍ. حَدِيثُ ابْنِ مَسْعُودٍ لَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ، عَوْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ لَمْ يَلْقَ ابْنَ مَسْعُودٍ، وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ العِلْمِ: يَسْتَحِبُّونَ أَنْ لَا يَنْقُصَ الرَّجُلُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ مِنْ ثَلَاثِ تَسْبِيحَاتٍ. وَرُوِيَ عَنِ ابْنِ المُبَارَكِ أَنَّهُ قَالَ: «أَسْتَحِبُّ لِلإِمَامِ أَنْ يُسَبِّحَ خَمْسَ تَسْبِيحَاتٍ لِكَيْ يُدْرِكَ مَنْ خَلْفَهُ ثَلَاثَ تَسْبِيحَاتٍ» وَهَكَذَا قَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-261.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




 

 


 

 


இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அவ்ன் பின் அப்துல்லாஹ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, இப்னு மாஜா-890, அபூதாவூத்-886, திர்மிதீ-261, ஷரஹ் மஆனில் ஆஸார்-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-, …


  • அபூஉபைதா —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-,


  • ஹஸன் பஸரீ —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-,


  • மஸ்ரூக் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-, தாரகுத்னீ-,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1421, முஸ்னத் தயாலிஸீ-1093,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.