தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-3448

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

ஹதீஸ்கலையை ஆழமாகக் கற்காதவர்களுக்கு, ரமலான் மாதம் முப்பது நாட்களை விடக் குறையாது என்ற எண்ணத்தை ஏற்படுத்திய ஒரு செய்தியின் விபரம்:

3448. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறையாது.

அறிவிப்பவர்: (ரலி)


அபூஹாதிம்-இப்னு ஹிப்பான் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்திக்கு இரண்டு கருத்துகள் உள்ளன.

முதலாவது கருத்து: தூசி, மேகமூட்டம் அல்லது மூடுபனி காரணமாக நமக்கும் பிறையைப் பார்ப்பதற்கும் இடையே தடை ஏற்பட்டு, நம்முடைய பார்வையின்படி (நாட்களின் எண்ணிக்கையில்) அந்த இரு மாதங்களும் குறைந்தாலும், உண்மையான கணக்கில் அவை குறைவதில்லை.

இரண்டாவது கருத்து: சிறப்பிலும் நன்மையிலும் அந்த இரு பெருநாட்களின் மாதங்களும் குறைவதில்லை. அதாவது, துல்ஹிஜ்ஜாவின் (முதல்) பத்து நாட்களும் சிறப்பில் ரமலான் மாதத்தைப் போன்றதே ஆகும் என்பதை நபி (ஸல்) குறிப்பிட நாடுகிறார்கள்.

இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்களின் பின்வரும் பொன்மொழி அமைகிறது:

“துல்ஹஜ் மாத (முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும் தான். ஆனால் “தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று கூறினார்கள். (புகாரி-969, அபூதாவூத்-2438)

அபூபக்ரா (ரலி)

أبو بكرة الثقفي

இறப்பு: ஹிஜ்ரி 51 அல்லது 52 அல்லது 59ல் பஸராவில்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: நஃபீஉ பின் ஹாரிஸ் பின் குல்தா

தந்தை பெயர்: ஹாரிஸ் பின் குல்தா

வம்சம்: அஸ்ஸகஃபீ

புனைப்பெயர்: அபூபக்ரா

ஊர் பெயர்: தாயிஃப்

பயணித்த ஊர்கள்: தாயிஃப், மதீனா, பஸரா

பிறப்பு: தாயிஃப்

இறப்பு: ஹிஜ்ரி 51 அல்லது 52 அல்லது 59ல் பஸராவில்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூபக்ரா ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். இவர்களின் இயற்பெயர் நஃபீஉ பின் ஹாரிஸ் பின் குல்தா. தாயிஃப் முற்றுகையின் போது கோட்டையிலிருந்து இறங்கி வந்து இஸ்லாமை ஏற்றார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் இவரை விடுதலை செய்தார்கள். பஸராவில் வசித்து வந்த இவர் ஹிஜ்ரி 51 அல்லது 52 அல்லது 59ல் பஸராவில் மரணித்தார். இவரிடமிருந்து இவரின் பல பிள்ளைகள் உட்பட பலர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): உபைதுல்லாஹ் பின் அபூபக்ரா, அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா, அப்துல் அஸீஸ் பின் அபூபக்ரா, முஸ்லிம் பின் அபூபக்ரா, கைஸா பின்த் அபூபக்ரா, அல்ஹஸன் அல்பஸரீ, இப்னு ஸீரீன், அல்அஹ்னஃப் பின் கைஸ், ரப்ஈ பின் ஹர்ராஷ், ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் அல்ஹிம்யரீ, அப்துர்ரஹ்மான் பின் ஜவ்ஷன் அல்கதஃபானீ, அபூ உஸ்மான் அன்நஹ்தீ

வேறு பெயர்கள்: நஃபீஉ பின் ஹாரிஸ், நஃபீஉ பின் மஸ்ரூஹ்


ஆதாரம்: muslimscholars.info (3229) · Should verify


ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْعِلْمِ أَنَّ شَهْرَ رَمَضَانَ لَا يَنْقُصُ عَنْ تَمَامِ ثَلَاثِينَ فِي الْعَدَدِ

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ، رَمَضَانُ وَذُو الْحِجَّةِ»

قَالَ أَبُو حَاتِمٍ: لِهَذَا الْخَبَرِ مَعْنَيَانِ، أَحَدُهُمَا: أَنَّ شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ فِي الْحَقِيقَةِ، وَإِنْ نَقْصَا عِنْدَنَا فِي رَأْيِ الْعَيْنِ عِنْدَ الْحَائِلِ بَيْنَنَا وَبَيْنَ رُؤْيَةِ الْهِلَالِ لِغَبَرَةٍ أَوْ ضَبَابٍ، وَالْمَعْنَى الثَّانِي: أَنَّ شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ فِي الْفَضْلِ، يُرِيدُ أَنَّ عَشْرَ ذِي الْحِجَّةِ فِي الْفَضْلِ كَشَهْرِ رَمَضَانَ، وَالدَّلِيلُ عَلَى هَذَا قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ فِيهَا أَفْضَلُ مِنْ عَشْرِ ذِي الْحِجَّةِ»، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-3448.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-.



 

 


மேலும் பார்க்க: புகாரி-1912.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.